Home Cinema News Rajinikanth: ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான கோல்டன் விசா பெற்று அபுதாபியில் உள்ள கோவிலுக்கு சென்ற ரஜினிகாந்த்

Rajinikanth: ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான கோல்டன் விசா பெற்று அபுதாபியில் உள்ள கோவிலுக்கு சென்ற ரஜினிகாந்த்

87
0

Rajinikanth: ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான கோல்டன் விசாவைப் பெற்ற நடிகர் ரஜினிகாந்த், அபுதாபியில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றார். அவர் அங்குள்ள BAPS இந்து கோவிலை பார்வையிட்டார், மேலும் கோவிலின் அதிகாரப்பூர்வ X கணக்கு படங்கள் மற்றும் வீடியோவைப் பகிர்ந்துள்ளது. ரஜினிகாந்த் கோயிலில் ஆசிர்வாதம் பெரும் படங்கள் மற்றும் வீடியோவை BAPS இந்து கோவில் பகிர்ந்துள்ளார். வீடியோவில் அவர் கோயிலின் முக்கியத்துவத்தை விளக்கும் ஒரு பூசாரியுடன் செல்வதைக் காணலாம். பூசாரி ரஜினிகாந்தின் மணிக்கட்டில் ஒரு நூலைக் கட்டி, அவர் கோவிலை விட்டு வெளியேறும் முன் அவருக்கு ஒரு புத்தகத்தை பரிசாக வழங்கினார். 

வியாழக்கிழமை அபுதாபி நிர்வாகக் குழு உறுப்பினரும், அபுதாபி அரசின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் (டிசிடி) தலைவருமான முகமது கலீஃபா அல் முபாரக்கிடம் இருந்து கோல்டன் விசாவைப் பெற்ற பிறகு ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் ஒரு வீடியோவைப் பகிர்ந்து கொண்டார். “அபுதாபி அரசாங்கத்திடம் இருந்து மதிப்புமிக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கோல்டன் விசாவைப் பெறுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அபுதாபி அரசுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். மேலும் இந்த விசாவை எளிதாக்கியதற்காகவும் அனைத்து ஆதரவிற்காகவும் எனது நல்ல நண்பர் லுலு குழுமத்தின் CMD திரு யூசுப் அலி அவர்களுக்கும் நன்றி என்றார்.

ரஜினிகாந்தின் பரபரப்பான படங்கள் ரிலீசுக்கு வரிசையாக உள்ளன. அவர் டி.ஜே.ஞானவேலின் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடிக்கவுள்ளார், இந்த படம் அக்டோபரில் வெளியாகவுள்ளது மேலும் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில் மற்றும் ராணா டக்குபதி ஆகியோரும் நடிக்கின்றனர். அவர் விரைவில் லோகேஷ் கனகராஜின் கூலி படப்பிடிப்பை மீண்டும் தொடங்கவுள்ளார்.

ALSO READ  Thalaivar 171: லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தலைவர் 171' படத்தில் நடிக்க நிராகரித்த ஷாருக்கான்

Leave a Reply