Home Cinema News PS1: ரஜினி, கமல்ஹாசனுக்கு அழைப்பு – பொன்னியின் செல்வன் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு தேதி

PS1: ரஜினி, கமல்ஹாசனுக்கு அழைப்பு – பொன்னியின் செல்வன் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு தேதி

50
0

PS1: மணிரத்னம் இயக்கத்தில் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற செப்ட்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது இதற்கான புரொமோஷன் வேலைகளை தொடங்கிய படக்குழு சமீபத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையில் உருவான ‘பொன்னி நதி’ என்ற சிங்கள் ட்ராக் பாடலை வெளியிட்டனர். கூடிய விரைவில் இரண்டாவது பாடலையும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மிக பெரிய பொருள் செலவில் உருவாகிவரும் இந்த படத்தில் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகிய மிகப்பெரிய நசத்திர பிரபலங்கள் நடித்துள்ளனர்.

ALSO READ  Samantha: சமந்தா பரபரப்பான உடையில் குளிர்ச்சியாக இருப்பது போல் கனவு காணும் புகைப்படம் இணையத்தில் வைரல்!

Also Read: நயன்தாரா மருத்துவமனையில் திடீர் அனுமதி – வாந்தி எடுக்க காரணம் என்ன?

பொன்னியின் செல்வன் நாவலை படமாக்குவதற்கு எம். ஜி. ஆர் முதல் கமல்ஹாசன் வரை பல பேர் முயற்சி செய்து வந்தனர். ஆனால் தற்போது இயக்குனர் மணிரத்னதால் அது சாத்தியமாகியுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தின் பாடல் வெளியிட்டு விழாவை சென்னையில் இருக்கும் நேரு உள்விளையாட்டு அரங்கில் வருகிறது செப்டம்பர் 6 ஆம் தேதி படக்குழு நடத்துகின்றனர். விழாவில் படத்தின் டிரெய்லரையும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். அதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது.

ALSO READ  Kollywood: விஷால் 'துப்பறிவாளன் 2' மற்றும் 'ரத்னம்' பற்றிய ரெட் ஹாட் அப்டேட்களைப் பகிர்ந்துள்ளார்!

PS1: ரஜினி, கமல்ஹாசனுக்கு அழைப்பு - பொன்னியின் செல்வன் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு தேதி

இந்த பொன்னியின் செல்வம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினி மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர் படக்குழு. ரஜினி மற்றும் கமல் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவார்கள் என்று பட குழு தெரிவிக்கின்றனர்.

Leave a Reply