Home Cinema News Jailer: ஜெயிலர் கதை விவாதத்தில் கலந்து கொண்ட ரஜினி – வியந்து போன படக்குழு!

Jailer: ஜெயிலர் கதை விவாதத்தில் கலந்து கொண்ட ரஜினி – வியந்து போன படக்குழு!

91
0

Jailer: அண்ணாத்த, ஃபீஸ்ட் படங்களை தயாரித்த சன் பிக்சர் மீண்டும் ‘ஜெயிலர்’ படத்தின் மூலம் ரஜினி-நெல்சன் இணைந்துள்ளனர். இப்படத்தில் ரஜினியின் ஜோடியாக ஐஸ்வர்யா ராய், நடிக்க உள்ளார். அதாவது நெல்சனிடம் ஐஸ்வர்யா ராய் கதையைக் கேட்டுவிட்டாரம். கதை ஐஸ்வர்யா ராய்க்கு மிகவும் பிடித்துவிட்டதால், இன்னும் ஒரு இரு நாளுக்குள் பதில் சொல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி ஆகியோர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: சூர்யா-41 படத்துக்கு ‘வணங்கான்’ என்று தலைப்பு – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

தற்போதைய தகவல் படி அடுத்த மாதம் 10-ம் தேதி படப்பிடிப்புக்குக்தயாராகி வருகிறார்கள் பட குழுவினர். இதனிடையே சுவாரஸ்யத் தகவலையும் கூறப்படுகிறது. திரைக்கதையில் நெல்சனுக்குத் கே.எஸ். ரவிக்குமார் உதவியதாக வரும் தகவல் பொய் என்று தெரிவித்துள்ளார். ஒரு சூழலில் நெல்சனே ரஜினிடம், கே.எஸ்.ஆர் போன்ற சீனியர் இயக்குநர்களிடம் இந்தக் கதையை விவாதிக்கலாமா எனக் கேட்டதாகவும், அதை ரஜினிகாந்த் மறுத்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். உங்க ஒர்க் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு, எதைப் பத்தியும் யோசிக்காமல் தைரியமா எழுதுங்க நெல்சன் என்று ரஜினிகாந்த் நம்பிக்கை கொடுத்த பிறகு புல் கான்பிடன்டாகக் களமிறங்கியிருக்கிறார் நெல்சன்.

ALSO READ  Official: அஜித்குமாரின் ஏகே 62 படத்தை பற்றிய புதிய தகவல் - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்

Jailer: ஜெயிலர் கதை விவாதத்தில் கலந்து கொண்ட ரஜினி - வியந்து போன படக்குழு!

ஜெயிலர் கதை விவாதம் நடக்கும் நேரத்தில் ரஜினியே நேரில் வந்து கதை குறித்த தனது கருத்துகளையும் சொல்லியிருக்கிறார். கதையில் காமெடி தூக்கலாக இருக்கட்டும், உங்க டீம் நடிகர்கள் அப்படியே பயன்படுத்திக்கங்க. நடிகர்கள் தேர்வு உங்க சாய்ஸ் என ரஜினி சொல்லியிருப்பதுடன், நெல்சனிடாம் தனது முந்தைய காமெடி படங்கள் ‘தில்லு முல்லு’ உட்பட சில படங்களின் ஸ்டோரி டிஸ்கஷனின்போது நடந்த சில சுவாரசிய தகவல்கள் சொல்லி நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.

ALSO READ  Official: அஜீத் குமார் தரப்பில் மாபெரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

Also Read: Thalapathy-67: தளபதி-67 படத்தின் டைட்டில் லீக் – வைரலாக்கும் ரசிகர்கள்

ரஜினிகாந்த் இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தும் இன்னமும் ஒரு புதுமுக ஹீரோ போல் இயக்குநரின் ஆபீஸுக்கே தேடி வந்து கதையில் டிஸ்கஷனின் செய்வதை கண்டு நெல்சனின் பட குழு வட்டாரமே வியக்கிறதாம்.

Leave a Reply