Home Cinema News Radhe Shyam: பொங்கல் ரேஸில் பின்வாங்கிய படங்கள்: காரணம் இதன்

Radhe Shyam: பொங்கல் ரேஸில் பின்வாங்கிய படங்கள்: காரணம் இதன்

45
0

Radhe Shyam: ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக பொங்கலுக்கு வெளியாகவிருந்த ராதே ஷ்யாம் திரைப்படம் வெளியீட்டை ஒத்திவைப்பதாக ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமான அறிவிப்பை அறிவித்தது.

Radhe Syam

ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் பான் இந்தியா நடிகரான பிரபாஸ் நடிப்பில் உருவான திரைப்படம் ராதே ஷ்யாம். இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்காக ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். தற்போது  இப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.

ராதே ஷ்யாம் 350 கோடி செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட  இத்திரைப்படம் தெலுங்கு,  ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடா ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவிருந்தது. தற்போது திடீரென இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் திரையரங்கு மூடப்பட்டது. ஒரு சில மாநிலங்களில் 50 % இருக்கையுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக பொங்கலுக்கு வெளியாகவிருந்த RRR திரைப்படம் ஏற்கனவே வெளியீட்டை ஒத்திவைத்தது. 

தற்போது ராதே ஷ்யாம் திரைப்படமும் வெளியீட்டை ஒத்திவைப்பதாக ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமான அறிவிப்பை அறிவித்தது . ராதே ஷ்யாம் வெளியீடு குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், தற்போது கொரோனா பரவல் நிலவிவரும் சூழலை கருத்தில் கொண்டு ராதே ஷ்யாம் திரைப்படத்தின் வெளியீட்டை தள்ளிவைக்கின்றோம். கடந்த சில தினங்களுக்கு முன் திரைப்படத்தை வெளியிட பல்வேறு  முயற்சிகளை செய்தோம். தற்போது திரையரங்குகளில் ராதே ஷ்யாமை வெளியிட சற்று காத்திருக்கும் சூழ்நிலை  ஏற்பட்டுள்ளது. உங்கள் ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றி. என குறிப்பிட்டுள்ளனர்.

 

 

ALSO READ  Coolie: ரஜினிகாந்தின் கூலி படத்தின் பற்றிய புதிய ஹாட் அப்டேட் இதோ

Leave a Reply