Home Cinema News Project K: ப்ராஜெக்ட் கே படத்தின் தலைப்புடன் வெளியாகும் முன்னோட்ட வீடியோ – எப்போது தெரியுமா...

Project K: ப்ராஜெக்ட் கே படத்தின் தலைப்புடன் வெளியாகும் முன்னோட்ட வீடியோ – எப்போது தெரியுமா ?

140
0

Project K: தெலுங்கு சூப்பர் ஸ்டார் பிரபாஸ் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி வெற்றிக்கு பிறகு பான் இந்திய நடிகராக மாறியது மட்டுமல்லாமல், தமிழ் ரசிகர்களிடையே அதிகம் பிரபலமடைந்தார். பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனின் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பான்-இந்தியா அறிவியல் புனைகதை த்ரில்லரான, ப்ராஜெக்ட் கே குறித்து தயாரிப்பாளர்கள் ஒரு அற்புதமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ப்ராஜெக்ட் கே சமீபத்தில் அமெரிக்காவில் இருக்கும் சான் டியாகோவில் நடந்த காமிக்-கான் நிகழ்விற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படமாக வரலாறு படைத்தது. படத்தின் முன்னணி நடிகர்களான பிரபாஸ், தீபிகா மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் ஜூலை 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் பங்கேற்கவுள்ளனர். படத்தின் க்ளிம்ப்ஸ் ஜூலை 20 ஆம் தேதி அமெரிக்காவிலும் ஜூலை 21 ஆம் தேதி இந்தியாவிலும் வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். ஒரு சிறப்பு போஸ்டர் படத்தின் தலைப்பும் காமிக் கானில் வெளியிடப்படும்.

ALSO READ  சூரியா 40 ஆவது படத்தில் இணையும் பிரபலம் - படக்குழு வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு

Project K: ப்ராஜெக்ட் கே படத்தின் தலைப்புடன் வெளியாகும் முன்னோட்ட வீடியோ - எப்போது தெரியுமா ?

புராஜெக்ட் கே திரைப்படத்தில் புகழ்பெற்ற இந்தி திரைப்பட நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நாக் அஸ்வின் இயக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் அஸ்வினி தத் தயாரிக்கிறார். படம் ஜனவரி 12, 2024 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply