Home Cinema News Official: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் இணையும் பிரபல தெலுங்கு ஹீரோ மற்றும் காமெடியன்

Official: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் இணையும் பிரபல தெலுங்கு ஹீரோ மற்றும் காமெடியன்

18
0

Jailer: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘ஜெயிலர்’. இந்த படம் பான் இந்திய மாற்று மல்டிஸ்டார்கள் நடிப்பில் உருவாகி வருகிறது. முதலில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் இணைந்தார், சமீபத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் படத்தில் இணைந்தார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

Official: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் இணையும் பிரபல தெலுங்கு ஹீரோ மற்றும் காமெடியன்

தற்போதைய செய்தி என்னவென்றால், பிரபல டோலிவுட் நடிகர் சுனில் ‘ஜெயிலர்’ படத்தில் இணைந்தார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய சுனில், 2010 இல் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘மரியாதா ரமன்ணா’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். மேலும் 2021 பான் இந்தியன் பிளாக்பஸ்டர் ‘புஷ்பா’ படத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ மற்றும் கார்த்தியின் ‘ஜப்பான்’ உட்பட பல தமிழ் படங்களில் சுனில் ஒரு பகுதியாக உள்ளார். அனிருத் இயசயில் உருவாகும் ஜெயிலர்’ படத்தில் ரஜினிகாந்த், மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வரிகிறார்கள். 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் வரும் வாரங்களில் படம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடை விடுமுறையை பிரமாண்டமாக வெளியிட சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply