Home Cinema News Suriya 42 update: சூர்யா மற்றும் திஷா பதானி நடிக்கும் சூர்யா 42 படத்தின் புதிய...

Suriya 42 update: சூர்யா மற்றும் திஷா பதானி நடிக்கும் சூர்யா 42 படத்தின் புதிய ஹாட் அப்டேட்

67
0

Suriya 42: சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘சூர்யா 42’ என்று அழைக்கப்படும் பிரம்மாண்டமான படத்தில் நடித்து வருகிறார். பீரியட் ஆக்‌ஷன் படத்தின் சூர்யா பல வேடங்களில் நடிக்கிறார். மேலும் நாடு முழுவதும் பல ஷெட்யூல் முடித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குறித்த சூடான செய்தி கிடைத்துள்ளது.

Also Read: அஜித் குமார் வெளிநாட்டுப் பயணத்தின் போது அவரை சந்தித்த தமிழ் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படங்கள்

இன்று முதல் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுக்கான படப்பிடிப்பை படக்குழு தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் உள்ள பிலிம் சிட்டியில் விமானத்தின் உட்புறம் போன்று பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் திஷா பதானி தற்காப்பு கலை பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டார். அவர் சூர்யா 42 படத்தில் ஆக்‌ஷன் பிளாக் செய்ய தயாராகி வருவதாக நம்பப்படுகிறது.

ALSO READ  Cobra: விக்ரமின் கோப்ரா படம் இந்த தேதியில் வெளியாகும்

Suriya 42 update: சூர்யா மற்றும் திஷா பதானி நடிக்கும் சூர்யா 42 படத்தின் புதிய ஹாட் அப்டேட்

இப்படத்தின் குறிப்பிட்ட பகுதி மார்ச் அல்லது ஏப்ரலில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் பெரிய திரைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். 3டியில் தயாரிக்கப்பட்டு 10 மொழிகளில் மிகப் பெரிய வெளியீட்டை நோக்கமாக கொண்டுள்ளார் படக்குழுவினர்.

Leave a Reply