Home Cinema News Biopic: முத்தையா முரளிதரன் பயோபிக் படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது – விஜய்சேதுபதிக்கு...

Biopic: முத்தையா முரளிதரன் பயோபிக் படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது – விஜய்சேதுபதிக்கு பதில் யார்?

47
0

Biopic: இப்போதெல்லாம் பயோபிக் படங்களுக்கு அதிக வரவேற்ப்பு உள்ளது. அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகர் திலகம், சூரியா நடித்த சூரரைப்போற்று, மாதவன் நடித்த ராக்கெட்ரி ஆகிய படங்கள் சிறந்த எடுத்துக்காட்டு. இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை தற்போது படமாகபட்டு வருகிறது. அந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்திற்க்கு ‘800’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ALSO READ  Kollywood: சந்திரமுகி 2 படத்தின் ரன் டைம் அறிவிக்கப்பட்டுள்ளது

விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிக்கயிருபதாக இருந்த நிலையில் தமிழ் விரோதியாகக் கருதப்படும் முரளியை சித்தரிக்கக் கூடாது என்று பல முக்கிய திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்ததை அடுத்து மக்கள் செல்வன் படத்திலிருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டது. தற்போது விஜய் சேதுபதிக்கு பதிலாக மதுர் மிட்டல் நடிக்கிறார். போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி வரும் ஹிந்திப் படமான ‘மைதான்’ படத்திலும் அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ALSO READ  Kollywood: சிவகார்த்திகேயனின் அயலான் 2024 பொங்கலுக்கு வெளியாகும்

Biopic: முத்தையா முரளிதரன் பயோபிக் படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது - விஜய்சேதுபதிக்கு பதில் யார்?

ஜிப்ரான் இசையில், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும், பிரவீன் கே.எல் படத்தொகுப்பும் செய்துள்ள ‘800’ படத்தை ஸ்ரீபதி இயக்குகிறார். படத்தின் தலைப்பு முரளிதரன் பெற்ற டெஸ்ட் விக்கெட்களின் எண்ணிக்கையைக் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வரும் இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகவுள்ளது.

Leave a Reply