Home Cinema News Maaran Motion Poster: மிரட்டலான ‘மாறன்’ மோஷன் போஸ்டர் வந்துவிட்டது

Maaran Motion Poster: மிரட்டலான ‘மாறன்’ மோஷன் போஸ்டர் வந்துவிட்டது

40
0

Maaran Motion Poster: ஜி.வி. பிரகாஷ் குமாரின் மிரட்டலாக பின்னணி இசையில் ‘மாறன்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Maaran Motion Poster: மிரட்டலான 'மாறன்' மோஷன் போஸ்டர் வந்துவிட்டது

கார்த்திக் நரேன் இயக்கதில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘மாறன்’. இந்தப்படத்தை தொடர்ந்து மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படப்பிடிப்பில் தனுஷ் கலந்து கொண்டார். இந்நிலையில் தற்போது ‘மாறன்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

தனுஷ், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. இந்த பாடத்தை தொடர்ந்து ஹாலிவுட் படமான தி க்ரே மேன் படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு தமிழ்நாடு திரும்பினார் தனுஷ். அதன் பிறகு மீண்டும் ஐதராபாத்தில் நடைபெறும் மாறன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

ALSO READ  Ajith Kumar: அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி வெளியீட்டுத் திட்டம் குறித்த புதிய அப்டேட்

தற்போது ‘மாறன்’ படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளதால், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் தனுஷ். ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராஷி கண்ணா, உள்ளிட்டோர் இந்தப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். சிறிய இடைவெளி பிறகு அனிருத் இசையில் கூட்டணி அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  Maamanan: நெஞ்சமே! நெஞ்சமே! மாமன்னன் படத்திலிருந்து கீர்த்தி சுரேஷ் மற்றும் உதயநிதியின் ரொமான்டிக் பாடல் வரிகள் - வைரல் பதிவு இதோ!

தற்போது ஜிவி பிரகாஷ் குமாரின் மிரட்டலாக பின்னணி இசையில் ‘மாறன்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப்படம் திரையரங்குகளில் வெளியானால் மாறன் திரைப்படம் மிரட்டலாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த படத்தில் சமுத்திரகனி, மாஸ்டர் மகேந்திரன், காளி வெங்கட் இன்னும் பலர் நடித்து வருகின்றனர். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ‘மாறன்’ படம் நேரடியாக வெளியாக உள்ளது.

Leave a Reply