Home Cinema News Singapore Saloon: RJ பாலாஜியின் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட...

Singapore Saloon: RJ பாலாஜியின் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்

27
0

Singapore Saloon: RJ பாலாஜி தனது அடுத்த படத்துக்கு இயக்குனர் கோகுலுடன் இணைந்து நடிக்கிறார் என்று சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் பார்த்தோம். தறப்போது படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் இன்று படக்குழுவினர் வெளியிடப்பட்டது.

Singapore Saloon: RJ பாலாஜியின் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்

‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் இந்தியா Vs இங்கிலாந்து, T20 WC அரையிறுதி போட்டியின் வர்ணனை பெட்டியில் RJ பாலாஜியுடன் மோஸ்ட் வான்டட் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நேரலையில் வந்தார். 2023 கோடையில் வெளியாக உள்ள இப்படம் ஒரு நகச்சுவை நிறைந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும்.

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக ஷிவானி ராஜசேகர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம், வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் ‘கொரோனா குமார்’ படத்தில் சிம்புவை இயக்க கோகுல் முன்பு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த படம் கிடப்பில் போடப்பட்டிருக்கலாம் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply