Home Cinema News பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தியின் கதாபாத்திரத்தின் பெயர் – ஃபர்ஸ்ட் லுக் வந்துவிட்டது

பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தியின் கதாபாத்திரத்தின் பெயர் – ஃபர்ஸ்ட் லுக் வந்துவிட்டது

53
0

Ponniyin Selvan: இந்த ஆண்டின் (2022) மிக பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது (Ponniyin Selvan)’ பொன்னியின் செல்வன்’.

மணிரத்னம் (Mani Ratnam) இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம், சரத்குமார், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ‘லைகா’ நிறுவனம் (Lyca Productions) 500 கோடி பட்ஜெட்டில் மிகப்பிரமாண்டமாகத் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் (A. R. Rahman) இசையமைக்கிறார்.

ALSO READ  Dhanush: தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பான் இந்தியா படமாக (Pan India Movie) செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என கூறபடுகிறது.

பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தியின் கதாபாத்திரத்தின் பெயர் - ஃபர்ஸ்ட் லுக் வந்துவிட்டது

இதனிடையே ‘பொன்னியின் செல்வன்’ (Ponniyin Selvan) படத்தின் கதாபாத்திரங்களின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று (04.07.2022) விக்ரம் கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ  Thala Thalapathy Movie: தல தோனி தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் திரைப்படத்தின் விவரங்கள்

அதனைத் தொடர்ந்து தற்போது கார்த்தியின் கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்-கை படக்குழு வெளியிட்டு இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதன் படி கார்த்தி, இப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தளத்தில் படக்குழு தெரிவித்து, “ராஜ்ஜியம் இல்லாத இளவரசன், உளவாளி, சாகசக்காரன்… இதோ வருகிறான் வந்தியத்தேவன்” என குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply