Karthi: நடிகர் கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ‘விருமன்’, ‘பொன்னியின் செல்வன் 1’ மற்றும் ‘சர்தார்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் தான் அவர், தனது நடிப்பில் வரவிருக்கும் திரைப்படமான ‘ஜப்பான்’ படப்பிடிப்பை தொடங்கினார், இது பாராட்டப்பட்ட இயக்குனர் ராஜு முருகனால் இயக்கப்படுகிறது மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
Also Read: பொன்னியின் செல்வன் 2 படப்பிடிப்பை தொடங்குகிறார் மணிரத்னம்
Hello guys, my Facebook page has been hacked. We are trying to restore it with Fb team.
— Karthi (@Karthi_Offl) November 14, 2022
இதற்கிடையில் கார்த்தி தன சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை சரிபார்த்துள்ளார். தற்போது கார்த்தி பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “வணக்கம் நண்பர்களே, எனது பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதை Fb குழுவுடன் மீட்டெடுக்க முயற்சிக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீப காலமாக பல பிரபலங்களின் கணக்குகள் ஹேக் செய்யப்படுகின்றன. இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் கார்த்திக்கின் ஃபேஸ் புக் கணக்கு ஹேக் செய்திருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார்த்திக்கின் பேஸ்புக் பக்கத்தை 3.9 மில்லியன் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர்.