Home Cinema News Breaking: ‘பையா 2’வில் மீண்டும் இணையும் கார்த்தி மற்றும் தமன்னா

Breaking: ‘பையா 2’வில் மீண்டும் இணையும் கார்த்தி மற்றும் தமன்னா

57
0

Paiya 2: என். லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில் 2010 இல் வெளியான ‘பையா’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டடிது வணிக ரீதியாக வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், ஒரு வழிபாட்டு அந்தஸ்தையும் பெற்றது. யுவன் ஷங்கர் ராஜாவின் சில மறக்கமுடியாத பாடல்கள் மற்றும் இசையுடன் ரொமாண்டிக் ரோட் த்ரில்லர் வகையை ரசிகர்கள் மிகவும் கொண்டாடினர்.

இயக்குனர் லிங்குசாமி, ஆர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் ‘பையா 2’ படத்தை ஸ்டுடியோ க்ரீனுடன் இணைந்து தயாரித்து வருவதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வந்தன. தற்போது ‘பையா 2’ படத்தில் நடிகர் கார்த்தியே முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அவரது 28 ஆவது படமாக இந்த படம் இருக்கும் என்று கருதப்படுகிறது, பையா படத்தில் நடித்த நடிகை தமன்னவே இந்த படத்தில் நடிக்ககூடும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெயவிகின்றனர்.

ALSO READ  Kollywood: இந்த தமிழ் படம் வேற்று மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ளது

Breaking: 'பையா 2'வில் மீண்டும் இணையும் கார்த்தி மற்றும் தமன்னாஹீரோ கார்த்தி சமீபத்தில் ‘பி எஸ் 1’ மற்றும் ‘பி எஸ் 2’, ‘விருமன்’, ‘சர்தார்’ ஆகிய வெற்றி படங்களில் நடித்தார். தற்போது இவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்கிறார். மேலும் ஜப்பான் மற்றும் ’96’ புகழ் பிரேம் இயக்கத்தில் அரவிந்த் சாமி முக்கிய வில்லனாக நடிக்க இருக்கும் புதிய படத்திலும் நடிக்கிறார்.

Leave a Reply