Home Cinema News Kollywood: ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் இணைந்து நடிக்கும் புதிய படம் – இப்படத்தை...

Kollywood: ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் இணைந்து நடிக்கும் புதிய படம் – இப்படத்தை இயக்கும் பிரபல பெண் இயக்குனர் யார் தெரியுமா?

46
0

Kollywood: மணிரத்னத்தின் இரண்டு மெகா பிளாக்பஸ்டர் ஹிட் படங்களான பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய படங்களில் அருண்மொழி வர்மனாக ரசிகர்களை கவந்தார் ஜெயம் ரவி. அவரது நடிப்பில் தற்போது ‘ஜேஆர் 33’ படத்திற்காக நித்யா மேனனுடன் ஜோடி சேரவுள்ளார். இப்படத்தை பிரபல பெண் இயக்குனர் இயக்க போவதாக தகவல் தெரிவிகின்றனர்.

ALSO READ  ராகவா லாரன்ஸ்சின் புதிய படம் அறிவிப்பு

ஜெயம் ரவியின் ‘JR 33’ படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பதோடு, அமைச்சர் உதயநிதியின் மனைவயுமான கிருத்திகா உதயநிதி இயக்குகிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிகின்றனர். இப்படத்திற்கு ஏ. ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார், இது ‘பி.எஸ் 1’ ‘பி.எஸ் 2’ மற்றும் வெல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் வரவிருக்கும் ‘ஜெனி’ ஆகிய படங்களுக்குப் பிறகு ஜெயம் ரவியுடன் நான்காவது கூட்டுப்பணியாகும்.

ALSO READ  பிகில் படம் தீபாவளிக்கு வருமா?

Kollywood: ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் இணைந்து நடிக்கும் புதிய படம் - இப்படத்தை இயக்கும் பிரபல பெண் இயக்குனர் யார் தெரியுமா?

மேலும் கிருத்திகா உதயநிதி தனது ஹோம் பேனரான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திற்காக இயக்கும் இரண்டாவது படம் இது. கீர்த்தி சுரேஷுடன் ‘சைரன்’, நயன்தாராவுடன் ‘இறைவன்’, டாப்சி பண்ணுவுடன் ‘ஜன கண மன’ ஆகியவை ஜெயம் ரவியின் நடிப்பில் உள்ள மற்ற படங்கள்.

Leave a Reply