Home Cinema News Leo: விஜய்யின் லியோ படத்தில் ஸ்டார் ஹீரோகள் கேமியோவில் நடிப்பது உண்மையா?

Leo: விஜய்யின் லியோ படத்தில் ஸ்டார் ஹீரோகள் கேமியோவில் நடிப்பது உண்மையா?

65
0

LEO: தளபதி விஜயின் ‘லியோ’ திரைப்படம் இந்த ஆண்டில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும். செவன் ஸ்கிரீன் தயாரிக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்திற்கு பின் இரண்டாவது முறையாக தளபதி விஜயை இயக்குகிறார்.

இந்த பான்- இந்தியா திரைப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், எஸ்.ஜே.சூர்யா, கவுதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில், லியோவில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக செய்திகள் வந்தன. இப்போது, ​​தமிழ் ஹீரோ தனுஷ் லியோவில் ஒரு முக்கியமான கேமியோவில் நடிக்கிறார் என்றும் திருப்பதி மொட்டை தோற்றத்துடன் லியோவில் வில்லனாக தனுஷை காணலாம் என்று சமூக ஊடகங்களில் வைரலாகி வந்தது. தற்போது லியோவில் இந்த ஸ்டார் ஹீரோக்கள் நடிப்பது உண்மையா ? என்ற தகவல் வெளிவந்துள்ளது.

ALSO READ  Naane Varuven CBFC Update: நானே வருவேன் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது

Leo: விஜய்யின் லியோ படத்தில் ஸ்டார் ஹீரோகள் கேமியோவில் நடிப்பது உண்மையா?

இருப்பினும், லியோவின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனுஷை இன்னும் அணுகவில்லை என்றும், வைரலான தகவல்கள் வெறும் ஊகங்கள் என்றும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விஜய் மற்றும் தனுஷ் திரை இடத்தைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை ரசிகர்கள் தவறவிட்டதாகத் தெரிகிறது. லியோ தீபாவளி பண்டிகை விருந்தாக அக்டோபர் 19 அன்று வெளியாகிறது. ராக் ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Leave a Reply