Home Cinema News Indian 2: படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்லும் இந்தியன் 2 படக்குழு – எங்கு தெரியுமா?

Indian 2: படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்லும் இந்தியன் 2 படக்குழு – எங்கு தெரியுமா?

84
0

Indian 2: கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘இந்தியன் 2’. நீண்ட நாட்களாக நிறுத்தபட்டிருந்த படப்பிடிப்பு கடந்த ஆண்டு மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சேனாபதியின் பிளாஷ்பேக் பகுதிகள் தற்போது படமாக்கப்படுவதாக கூறப்படுகிறது. தற்போது கடப்பாவில் ஷூட்டிங் நடந்து வருகிறது. கமல் திருப்பதியில் இருந்து தினமும் கடபாவிற்கு ஹெலிகாப்டர் மூலம் ஷூட்டிங் செல்கிறார்.

Also Read: தளபதி 67 படத்தின் புரோமோ வீடியோவுடன் வெளியான அதிகாரபூர்வ தலைப்பு

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஹெலிகாப்டருடன் கமல்ஹாசன் இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக வெளிநாட்டிற்கு பறக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படக்குழு தென்னாப்பிரிக்காவிற்கு போக இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் 15 நாட்களுக்கு அங்கு படப்பிடிப்பு நடக்கும் என்று தகவல் தெரிவிக்கின்றனர். இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது.

ALSO READ  Vanangaan Update: வணங்கான் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது - பரபரப்பான அப்டேட்

Indian 2: படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்லும் இந்தியன் 2 படக்குழு - எங்கு தெரியுமா?

ஏப்ரல் மாதத்திற்குள் முழு படப்பிடிப்பையும் முடிக்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார் மற்றும் தயாரிப்பாளர்கள் இந்த ஆண்டு 2023 தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். வெளியீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையில், இந்தியன் 2வில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Leave a Reply