Home Cinema News Kollywood: சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ பற்றிய பரபரப்பான ஹாட் அப்டேட் இதோ

Kollywood: சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ பற்றிய பரபரப்பான ஹாட் அப்டேட் இதோ

183
0

Kollywood: சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது சூர்யா ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. படக்குழுவினர் கடந்த வாரம் கொடைக்கானலில் ஒரு புதிய ஷெட்யூல் தொடங்கினர்கள். ‘பொன்னியின் செல்வன் 2’ முன் வெளியீட்டு விழாவில் கார்த்தி அதை உறுதிப்படுத்தினார். தற்போது கங்குவா குறித்த சில பரபரப்பான செய்தி கிடைத்துள்ளன.

Also Read: ‘தளபதி 68’ இயக்குனர் மாற்றப்பட்டாரா? – ஹாட் அப்டேட் இதோ

படக்குழு தற்போது கொடைக்கானலில் உள்ள வனப்பகுதியில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. நாம் ஏற்கனவே படித்த செய்திகள் படி, இந்த ஷெட்யூலில் குறிப்பிட்ட காலப்பகுதிகள் படமாக்கப்படுகின்றன. இந்த படப்பிடிப்பு சுமார் 20 நாட்கள் நடைபெறும் என்று தெரிகிறது. ‘கேஜிஎஃப்’ புகழ் நடிகர் பி.எஸ்.அவினாஷும் நட்சத்திர பட்டாளத்தில் ஒரு அங்கமாக இணைந்துள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார்.

ALSO READ  Thunivu run-time out: அஜித்தின் துணிவு படத்தின் ரன்-டைம் வெளியாகியுள்ளது

Kollywood: சூர்யா நடிக்கும் 'கங்குவா' பற்றிய பரபரப்பான ஹாட் அப்டேட் இதோ

கங்குவா படத்தில் ஆனந்தராஜ், கோவை சரளா, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் ரவி ராகவேந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சூர்யா பல கெட்டப்புகளிலும் நடிக்கும் இப்படம் பீரியட் ஃபேன்டஸி படமாக இருக்கும் நாம் அனைவரும் அறிந்த விஷயம். ஸ்டுடியோ க்ரீன் மற்றும் UV கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம், 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு திருவிழா நாளில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் 3டி வடிவத்தில் உலக முழுவதும் திரைக்கு வர உள்ளது.

Leave a Reply