Home Cinema News Jailer glimpse: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் சிறப்பு காட்சி (Glimpse) வெளியீடு...

Jailer glimpse: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் சிறப்பு காட்சி (Glimpse) வெளியீடு நேரம் இதோ

42
0

Jailer: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள். அந்த மாபெரும் மனிதருக்கு ரசிகர்கள் இந்த சிறப்பான நாளை கொண்டாடி வருகின்றனர். மேலும் ரசிகர்கள் மற்றும் பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தயாரிப்பாளர்கள் ரசிகர்கள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க புதிய அப்டேட் கொண்டு வருகிறார்கள்.

Also Read: OTT தளத்தில் முதலிடம் தொடரும் யசோதா திரைப்படம் – மகிழ்ச்சியில் தயாரிப்பாளர்கள்

ரஜினிகாந்த் அடுத்ததாக கமர்ஷியல் மாஸ் என்டர்டெய்னரான ஜெயிலர் படத்தில் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். பிஸ்ட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் இன்று மாலை 6 மணிக்கு ஜெயிலரின் ஒரு சிறப்பு காட்சி (Glimpse) வெளியாகும் என தயாரிப்பாளர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு அறிவித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஸ்டைலான தோற்றத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவ ராஜ்குமார், யோகி பாபு, வசந்த் பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

Leave a Reply