Home Cinema News Dhanush: தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Dhanush: தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

71
0

Dhanush: தனுஷ் தன் பன்முகத்திறனால் உலக ரசிகர்களை ஈர்த்து இன்று உலகளவில் பாராட்டக்கூடிய நடிகராக திகழ்கின்றார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என அனைத்திலும் சிறந்து திறமை கொண்ட தனுஷ். பாலிவுட், ஹாலிவுட் என உலகளவில் அசத்தி வருகின்றார். மேலும் அசுரன் மற்றும் ஆடுகளம் படத்தில் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இருமுறை வென்றுள்ளார் தனுஷ். இந்நிலையில் தனுஷ் சமீபத்தில் நடித்த சில திரைப்படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை. எனவே தற்போது தனுஷ் ஒரு மிகப்பெரிய வெற்றியை எதிர்பார்க்கிறார்.

தனுஷ் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு சமீபத்தில் வெளிவந்த மாறன், ஜகமே தந்திரம், அத்ராங்கி ரே ஆகிய படங்கள் திரையில் வெளியாகாமல் OTT யில் வெளியானது. மேலும் இப்படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. குறிப்பாக மாறன் திரைப்படம் படுதோல்வி அடைந்து சமூகத்தளங்களின் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இந்நிலையில் தனுஷின் படங்கள் தொடர்ந்து OTT யில் வெளியாகுவது மட்டுமல்லாமல் படுதோல்வி அடைவதை அவரின் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே தனுஷ் ரசிகர்கள் சமூகத்தளங்களின் மூலம் இனி வரும் படங்களை திரையில் வெளியிட கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ALSO READ  Jawan: தளபதி விஜய் ஜவான் இடத்தில் ஷாருக்கானுடன் காணப்பட்டார் - வைரலாகும் புகைப்படங்கள்

Dhanush: தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

ரசிகர்கள் தற்போது தனுஷ் நடித்து வரும் படங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார். மித்ரன் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம், பல ஆண்டுகளுக்கு பிறகு செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் வாத்தி ஆகிய படங்கள் மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்லும் என தனுஷ் மற்றும் ரசிகர்கள் நம்பியுள்ளார்கள். தற்போது தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் (2022) வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளர் பட குழுவினர். மேலும் நானே வருவேன் மற்றும் வாத்தி ஆகிய படங்கள் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து கொண்டு இருந்தால் தனுஷின் படங்கள் அடுத்தடுத்து திரையில் வெளியாக தயாராகி வருவதால் தனுஷ ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

ALSO READ  Karthi: கார்த்தி படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக என்ன காரணம்?

தனுஷ் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். கஸ்தூரி ராஜா இயக்கத்தில் செல்வராகவன் கதை, திரைக்கதையில், வெளியான இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது 20 வருடங்களுக்கு பிறகு துள்ளுவதோ இளமை மீண்டும் திரையில் வெளியாகவுள்ளது. துள்ளுவதோ இளமை தற்போது டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு வருவதால். திரைப்படம் வரும் ஜூலை 8 ஆம் தேதி திரையில் வெளியாவதாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தனுஷின் இந்த மூன்று செய்தியால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply