Ajith Kumar: தமிழ் நாட்டில் பாக்ஸ் ஆபீஸில் கிங் ஆகவும் மிக பெரிய ரசிகர்கள் பட்டாளம் கொண்ட நடிகர் அஜித் குமாரை அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் சமூக வலைதளங்களில் பாராட்டியுள்ளார். தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கே. விஜயபாஸ்கர், அஜித் இல்லத்துக்குச் சென்ற பின் தொடர்ந்து அதை பற்றி டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி சார்பில், முன்னாள் அமைச்சர் அண்ணன் கடம்பூர் ராஜூவுடன் தமிழ் சினிமாவின் முக்கிய முன்னணி நடிகர் திரு. அஜித்குமார் இல்லத்துக்குச் சென்று அவரது தந்தை பி. சுப்ரமணியத்தின் மறைவு காரணமாக இரங்கல் தெரிவித்தோம். என்றும் கடந்த இரண்டு ஆண்டுகளாக 2020 முதல் 2021 வரை மாநிலத்தில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் தீவிரமாகப் பங்கேற்ற விஜயபாஸ்கர் மேலும் கூறுகையில், “கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடந்த இந்த விவாதத்தில் பல்வேறு விஷயங்களைப் பேச வாய்ப்பு கிடைத்தது. அவரது (அஜித்) பேச்சு அனுபவம் நிறைந்தது. முதிர்ச்சியும், யதார்த்தமும், உண்மையும், பிறருக்கு உதவும் தூய மனமும் கொண்டவர், அதுவே மிகவும் பாராட்டத்தக்கது.
வாழ்க்கை என்பது ஒருவரின் எண்ணங்களுக்கு ஏற்றார் போல் அமையும், மேலும் அஜித் தனது அன்பான தந்தையின் ஆசியுடன் வெற்றி பெற வாழ்த்துகிறோம்” என்று டிவிட்டரில் பதிவிட்டார். தனது தந்தையை இழந்த அஜித்குமார், தனது தாய் மற்றும் உடன்பிறந்தவர்களை ஆறுதல்படுத்துவதற்காக நேரத்தை செலவிட்டு வருகிறார். இன்னும் ஒரு மாதத்தில் அவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘ஏகே 62’ படப்பிடிப்பை தொடங்கவுள்ளார், இதற்கு அனிருத் இசையமைக்கிறார்.
'எண்ணம்போல் வாழ்க்கை, எண்ணம்போல் தான் வாழ்க்கை'
அன்புத் தந்தையின் ஆசியோடு தொடர்க! வெல்க!
(3/3)
— Dr C Vijayabaskar – Say No To Drugs & DMK (@Vijayabaskarofl) April 2, 2023
அஜித்தின் தந்தை சமீபத்தில் மறைந்ததையடுத்து திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருவதை ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக நடிகர் விஜய் அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதையும், திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் நேரில் சந்தித்து பேசியதையும் பார்த்தோம். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அஜித்தை அவரது தந்தையின் மறைவுக்கு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பு குறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: