Home Cinema News Leo: ‘லியோ’ படத்தில் தளபதி விஜய்யின் அப்பாவாக நடிக்கும் சூப்பர் ஸ்டார் யார் தெரியுமா?

Leo: ‘லியோ’ படத்தில் தளபதி விஜய்யின் அப்பாவாக நடிக்கும் சூப்பர் ஸ்டார் யார் தெரியுமா?

65
0

Leo: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவாகிவரும் ‘லியோ’ படத்தில் விஜய்யின் அப்பாவாக மூத்த சூப்பர் ஸ்டார் ஒருவர் நடிக்கிறார் என்ற சூடான செய்தி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி சமுக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இதன் கிளைமாக்ஸ் காட்சியை அடுத்த மாதம் ஹைதராபாத்தில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சஞ்சய் தத் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே, மேலும் அவர் படத்தில் முக்கிய வில்லனாக இருப்பார் என்று பல யூகங்கள் இருந்தன. தற்போது அவர் விஜய்க்கு அப்பாவாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், படத்தில் விஜய்யின் அப்பாவாக சஞ்சய் தத் நடிக்கிறார் என்றும், திரைக்கதையில் அவர்கள் இருவரும் கேங்ஸ்டர்கள் என்றும் பாலிவுட் ஊடகம் ஒன்றில் அப்டேட் வந்துள்ளது. எனினும் இத்தகவல் பற்றின அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு காத்திருப்போம்.

ALSO READ  Kollywood: விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் அதிரடி திரைப்படம் தொடங்கப்பட்டது

Leo: 'லியோ' படத்தில் தளபதி விஜய்யின் அப்பாவாக நடிக்கும் சூப்பர் ஸ்டார் யார் தெரியுமா?
‘லியோ’ படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், கதிர், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் மேனன், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, ஏஜென்ட் டினா வசந்தி மற்றும் மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லலித் குமார் தனது செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் பேனரில் மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்கிறார். சதீஷ் குமார் தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் அன்பரிவ் ஸ்டண்ட் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இப்படம் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பெரும் எதிர்பார்ப்புடன் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply