Home Cinema News KH234: கமல் நடிக்கும் KH234 படத்திற்கு லோகேஷ் கனகராஜ் பாணியை கையாளுகிறாரா இயக்குனர் மணிரத்னம்?

KH234: கமல் நடிக்கும் KH234 படத்திற்கு லோகேஷ் கனகராஜ் பாணியை கையாளுகிறாரா இயக்குனர் மணிரத்னம்?

21
0

KH234: உலக நாயகன் கமல்ஹாசனும், பிரபல இயக்குனர் மணிரத்னமும் பல தசாப்தங்களுக்குப் பிறகு மற்றொரு திரைப்படத்தில் கைகோர்த்துள்ளனர் என்ற தகவல் நாம் ஏற்கனவே அறிந்ததே. தற்போது இப்படத்திற்கு தற்காலிகமாக KH 234 என்று பெயரிடப்பட்டுள்ளது, இந்த படத்தை பற்றின தகவல் தற்போது வரை தலைப்புச் செய்தியாகவே உள்ளது.

சமீபத்திய சலசலப்பின் படி, விக்ரம் திரைப்படத்திற்காக லோகேஷ் கனகராஜ் எப்படி புரோமோ வீடியோவை உருவாக்கினாரோ, அதே மாதிரியான ஒரு ப்ரோமோவை படமாக்க விரும்புகிறார் பொன்னியின் செல்வன் இயக்குனர் மணிரத்னம் என்று கூறுகின்றனர். KH 234 படப்பிடிப்பு இந்த ஆண்டு வருகிற மே 20, அன்று தொடங்கும் என்று வதந்தி பரவுகிறது. படத்தை பற்றின அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்க படுகிறது.

ALSO READ  சியான் விக்ரம், விஜய் சேதுபதி, நிவின் பாலி, கிச்சா சுதீப் நடிக்கும் மல்டிஸ்டாரர் படத்தின் இயக்குனர் இவர்தான்?

KH234: கமல் நடிக்கும் KH234 படத்திற்கு லோகேஷ் கனகராஜ் பாணியை கையாளுகிறாரா இயக்குனர் மணிரத்னம்?

இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கவுள்ளதாக கூறபடுகிறது. கமல்ஹாசன், மணிரத்னம், ஆர் மகேந்திரன், சிவா ஆனந்தி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் பிலிம்ஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply