MS Dhoni: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் மஹிந்திர சிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெயின்மென்ட் திரைப்பட தயாரிப்பில் இறங்கியுள்ளது. தமிழில் தனது முதல் திரைப்படம் உருவாக்குவதை அறிவித்தது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து முக்கிய மொழிகளிலும் திரைப்படங்களை தயாரிக்க உள்ளதாகவும் தோனி தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
Also Read: சர்தார் படம் திங்கட்கிழமை அன்று பாக்ஸ் ஆபிஸில் நல்ல முன்னேற்றம்
அறிவியல், திரில்லர் மற்றும் நகைச்சுவை உள்ளிட்ட வகைகளில் தயாரிப்பதற்காக பல திரைப்பட இயக்குநர்கள் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்களுடன் தோனி என்டர்டெயின்மென்ட் பேச்சுவார்த்தை நடத்தியாது. சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய ஐபிஎல் போட்டிகளை அடிப்படையாக வைத்து தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஏற்கனவே பிரபல ஆவணப்படமான ‘ரோர் ஆஃப் தி லயன்’ தயாரித்து வெளியிட்டது. மேலும் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த குறும்படமான “விமன்ஸ் டே அவுட்” டோனி தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு முயற்சியாக தமிழில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இந்தப் படம் தோனியின் மனைவி சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தில் ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும். தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார். இந்த படம் மிக விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இந்த படம் பற்றி ரமேஷ் தமிழ்மணி தனது அதிகாரபூர்வ அறிக்கையில், “சாக்ஷி எழுதிய கான்செப்ட்டை படித்ததில் இருந்தே இதன் சிறப்பு என்று எனக்குத் தெரியும். இந்த கருத்து புதுமையாகவும், குடும்ப பொழுதுபோக்கு அம்சமாகவும் இருக்கும். பார்வையாளர்கள் பார்த்து ரசிக்கும் வகையில் இந்த சிறப்பு படத்தை உயிர்ப்பிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்”. என்றார் இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி.