Dhanush: தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக இருக்கும் தனுஷ் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட், டாலிவுட் என்று பலமொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகராக வலம்வந்து கொண்டிருக்கிறார். தனுஷ் உலகளவில் பிரபலமான நடிகராக இருந்தாலும் அவர் சமீபத்தில் நடித்த ஜகமே தந்திரம், மாறன், அட்ராங்கி ரே ஆகிய படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது. மாறன் படத்தூக்கு கடுமையான விமர்சனங்கள் வந்தன. அவர் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை, அதோடு அவரது படங்கள் ஓடிடியில் வெளியாவதால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் இருக்கின்றனர்.
Also Read: Rashmika Mandanna: 4 கோடி வாங்கும் ராஷ்மிகா மந்தனா – நான் இன்னும் சிங்கிள் தான்
வரிசையாக தோல்வியை சந்தித்த தனுஷ் இப்போது நடிக்கும் படங்களில் வெற்றியை கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். நீண்ட வருடங்கள் கழித்து அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கும் படத்தில் தனுஷ் நடித்துள்ளார். ரசிகர்கள் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அதோடு தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் வாத்தி என்னும் படத்தில் நடிக்கிறார். யாரடி நீ மோகினி என்ற வெற்றி படத்தை இயக்கிய மித்ரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ படம் இம்மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது இப்படங்களின் மூலம் கட்டாயம் வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார் தனுஷ்.
தனுஷ் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் பாடகராக, பாடலாசிரியராக, இசையமைப்பாளராக, தயாரிப்பாளர் என்று பல துறைகளில் சிறப்பாக தன் திறமையை வெளிப்படுத்துகிறார். சிவகார்த்திகேயன் மற்றும் பிரியா ஆனந்த் நடித்த எதிர்நீச்சல் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார் தனுஷ். தொடர்ந்து பல வெற்றி படங்களை தயாரித்தார். அதை பின் ரஜினியின் காலா படத்தை தயாரித்த தனுஷ் பிறகு படங்களை தயாரிப்பதை நிறுத்தி விட்டார். அதை தொடர்ந்து நான்கு வருடங்கள் கழித்து தனுஷ் தயாரிப்பாளராக மீண்டும் களமிறங்குகிறார்.
Also Read: Maaveeran: சிவகார்த்திகேயன் ‘மாவீரன்’ திரைப்படத்தின் வைரலாகும் பூஜை புகைப்படங்கள்
இயக்குனர் மாரி செல்வராஜ், வெற்றிமாறன் இயக்கும் படங்களை தனுஷ் தனது வொண்டர் பார்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இவர்களின் இயக்கத்தில் தனுஷ் அவரது தயாரிப்பில் நடிப்பாரா இல்லையென்றால் வேற ஹீரோ நடிபார்களா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கூடிய விரைவில் இத்தகவல் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்க படுகிறது.