Home Cinema News Kollywood: தனுஷ் நடிப்பில் இசைஞானி இளையராஜா பயோபிக் படம் அதிகாரப்பூர்வமாக இந்த தேதியில் தொடங்கும்

Kollywood: தனுஷ் நடிப்பில் இசைஞானி இளையராஜா பயோபிக் படம் அதிகாரப்பூர்வமாக இந்த தேதியில் தொடங்கும்

111
0

Kollywood: பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் தடம் பதித்த ஒரே தமிழ் நடிகர் தனுஷ். இந்த பன்முக நட்சத்திரம் இசைஞானி இளையராஜா மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். இருவரிடமும் தன் அன்பே வெளிக்காட்டுவதில் அவர் ஒருபோதும் பின்வாங்கவில்லை.

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்திற்கு தனுஷ் தலைமை தாங்கவுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கப் போகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த படம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘கேப்டன் மில்லர்’ படத்திற்குப் பிறகு தனுஷ் மற்றும் அருண் மாதேஸ்வரன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்துக்கொண்டிருக்கும் இந்தப் படம் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ  Maaveeran OTT: மாவீரனை கைப்பற்றியது இந்த OTT தளம் - இத்தனை கோடிக்கு விற்பனையா?

Kollywood: தனுஷ் நடிப்பில் இசைஞானி இளையராஜா பயோபிக் படம் அதிகாரப்பூர்வமாக இந்த தேதியில் தொடங்கும்

சமீபத்திய செய்தி படி தனுஷ் நடிக்கும் இளையராஜா வாழ்க்கை வரலாற்று படம் புதன்கிழமை (மார்ச் 20) அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும். மும்பையைத் தளமாகக் கொண்ட தயாரிப்பு நிறுவனமான கனெக்ட் இந்த பிரமாண்டமான படத்தை தயாரிக்கிறது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருப்பினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்காக காத்திருக்கவேண்டும். மேலும் தனுஷிடம் ‘ராயன்’, ‘குபேரா’ போன்ற பரபரப்பான படங்களில் பிஸியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply