Home Cinema News Dhanush and Simbu combo: தனுஷ் மற்றும் சிம்பு இணைந்து நடிக்கும் படம் – உற்சாகத்தில்...

Dhanush and Simbu combo: தனுஷ் மற்றும் சிம்பு இணைந்து நடிக்கும் படம் – உற்சாகத்தில் ரசிகர்கள்

97
0

தனுஷ் மற்றும் சிம்பு ஒரு படத்தில் இணைந்து நடிப்பார்கள்.
மேலும் இருவரும் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களையும் கவனித்துக்கொள்வார்கள்.

தமிழ் சினிமாவில் தனுஷ் மற்றும் சிம்பு இருவரும் நடிப்பில் மிகப்பெரிய திறமைசாலிகள் என்பது நம் அனைவருக்கும் நன்றாக தெரிந்த விஷயம். மிக சமீபத்தில் சிம்பு வெந்து தனிந்து காடு மற்றும் தனுஷ் நானே வருவேன் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரைக்கு வெளியே அவர்கள் நல்ல நட்பு மற்றும் பரஸ்பர மரியாதையை பகிர்ந்து கொண்டாலும், அவர்கள் தொழிலில் போட்டியாளர்களாக கருதப்படுகிறார்கள்.

ALSO READ  அஜீத் மாற்று ஷங்கர் கூட்டணியில் முதல்வன் 2

Also Read: பிரின்ஸ் படத்தின் ப்ரீ-ரிலீஸ் ஈவன்ட் தேதி மற்றும் நேரம் உறுதிசெய்யப்பட்டது

தற்போது தனுஷும், சிம்புவும் இணைந்து ஒரு மெகா படத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய தகவல்களின்படி, தனுஷ் மற்றும் சிம்பு ஒரு படத்தில் இணைந்து நடிப்பார்கள் என்று செய்திகள் வந்துள்ளது. மேலும் இருவரும் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களையும் கவனித்துக்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. ‘பவர் பாண்டி’ படத்துக்கு பிறகு தனுஷ் இயக்கும் இரண்டாவது படம் இதுவாகும்.

ALSO READ  Kollywood: விஜய் ஆண்டனியின் புதிய படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது

Dhanush and Simbu combo: தனுஷ் மற்றும் சிம்பு இணைந்து நடிக்கும் படம் - உற்சாகத்தில் ரசிகர்கள்

தனுஷ் மற்றும் சிம்புவின் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு நடிகர்களும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்கள். இருவரும் இணைந்தால் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக இருக்கும். இருப்பினும், இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான செய்திக்காக காத்திருப்போம். சிம்பு மற்றும் தனுஷ் இருவருக்கும் ஒரு நம்பிக்கைக்குரிய கதை, திரைப்படம் தயாராகி வருகிறது.

Leave a Reply