Home Cinema News Dhanush: ரஜினி சார் ரசிகர்கள் விரும்பமாட்டார்கள்: எச்சரித்த தனுஷ்

Dhanush: ரஜினி சார் ரசிகர்கள் விரும்பமாட்டார்கள்: எச்சரித்த தனுஷ்

34
0

Dhanush: தலைவா என்று அழைக்கிறார் என்று அலிகான்விடம்  ஒரு லட்சம் முறை சொல்லிவிட்டேன். ஆனால் அதை அவர் கேட்பதில்லை. 

maaran
தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்தார். மற்றும் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மரற்றும் ஆனந்த். எல். ராய் இயக்கத்தில் ’அத்ரங்கி ரே’ படத்தில் சாரா அலிகான், அக்‌ஷய் குமருடன் இணைந்து தனுஷ் நடித்துள்ளார். இந்த்ப்படம் வரும் டிசம்பர் 24 ஆம் தேதி கிறிஸ்துமஸுக்கு டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் முதல்நாள் வெளியாகிறது. இந்தப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு தற்போது தீவிரமா ஈடுபட்டு வருகிறது.
 
இப்படம் தொடர்பான பேட்டியில், என் அப்பாவுக்காக நான் சமைத்துக் கொடுப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். அது சப்பாத்தியோ அல்லது ஆம்லெட்டோ சமையல் ஒரு அழகான மற்றும் தெய்வீகமான கலை என்பது என் கருத்து. என் அப்பாவுக்கு நான் நடிக்க வேண்டும் என்று விரும்பினார். பிறகு சமையல் தவிர்த்து எனக்கு ரொம்ப பிடித்த விஷயம் இளையாராஜாவின் பாடல். இளையராஜா சார் எனக்கு கடவுள், அம்மா, தாலாட்டு, எல்லாமே. ஒரு படம் எத்தனை விருதுகளை பெற்றாலும் அதற்கான பாராட்டுக்கள், மற்றும் பெருமை அத்தனையும் அந்த பட இயக்குநருக்கே கிடைக்கனும்.
 
சாரா அலிகான் என்னை தலைவா என்று அழைக்கிறார். தமிழ் திரையுலகில் தலைவர் ஒருவர் மட்டுமே, அது ரஜினிகாந்த் சார் மட்டும் தான். அப்படி கூப்பிட வேண்டாம் என்றும் இதை ரஜினி ரசிகர்கள் விரும்பமாட்டார்கள் என்றும் நான் சாரா அலிகான்விடம்  ஒரு லட்சம் முறை சொல்லிவிட்டேன். ஆனால் அதை அவர் கேட்பதில்லை என்று தெரிவித்தார் தனுஷ்.
ALSO READ  Breaking news: ரஜினிகாந்த் பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் இரண்டு பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்

Leave a Reply