Home Cinema News DaDa Movie release date: பிக் பாஸ் கவின் நடிக்கும் ‘டாடா’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ்...

DaDa Movie release date: பிக் பாஸ் கவின் நடிக்கும் ‘டாடா’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

27
0

DaDa: ‘பிக் பாஸ்’ நடிகர் கவின் நடிக்கும் ‘டாடா’ தயாராகி வருகிறது. இந்த படத்தை கணேஷ் கே. பாபு இயக்குகிறார். ஒலிம்பியா மூவீஸ் தயாரித்துள்ள இப்படத்தில், இயக்குனர் மற்றும் நடிகர் கே. பாக்யராஜ், அபர்ணா தாஸ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Also Read: விஜய் நடித்த வாரிசு படத்தின் மொத்த வசூல் – தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு

இப்படத்திற்கு எஷில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிருவனம் வெளியிடுகிறது என்ற செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்போதைய அதிகாரப்பூர்வ செய்தி என்னவென்றால், ‘டாடா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, ‘டாடா’ படம் பிப்ரவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

Leave a Reply