Home Cinema News Kollywood: பாக்யா வார இதழ் டிஜிட்டல் முறையில் உருவெடுக்கிறது – துவக்க நிகழ்வு எப்போது தெரியுமா?

Kollywood: பாக்யா வார இதழ் டிஜிட்டல் முறையில் உருவெடுக்கிறது – துவக்க நிகழ்வு எப்போது தெரியுமா?

742
0

Bhagyaraj: இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என்று பன்முக திறமை கொண்ட கே. பாக்யராஜ் அவர்கள் பாக்யா வார இதழ் என்ற பத்திரிகை துறையை நடத்தி வந்தனர், நிறைய கருத்துகளை அரிய உதவும் புத்தகமாக இருந்து வந்தது. இதில் கேள்வி பதில் என்ற அருமையான தொகுப்பை ஆசிரியர் பாக்யராஜ் அவர்கள் தனது வார இதழ் புத்தகத்தில் வெளியிடுவார். அது மிகவும் பிரபலமான ஒரு தொகுப்பு மட்டுமல்லாமல் அதற்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வந்தது.

32 ஆண்டுகளாக அனைவரின் பேராதரவுடன் உச்சத்தில் இருந்த பாக்யா இதழ் உலகமே சந்தித்த கொரோனா தொற்று காரணமாக முடக்கப்பட்டது. லாக்டோனில் கல்வி முதல், காய்கறிகள் வரை அதிகமாக ஆன்லைனில் வர தொடங்கிய நிலையில் மக்கள் அனைவரும் டிஜிட்டல் உலகிற்கு மாற தொடங்கிவிட்டனர். செய்திதால் முதல் புத்தகங்கள் வரை அனைத்தும் பிரின்ட் செய்து வெளியிட்ட காலங்கள் மாறி, வீட்டில் அமர்ந்தபடி ஆன்லைன் மூலம் கையில்யுள்ள செல்போனில் டிஜிட்டல் யுகத்திற்கு மாறிவிட்டனர்.

ALSO READ  AK62: ஐந்தாவது முறையாக அஜித்துடன் ஜோடி சேர்கிறார் த்ரிஷா

Kollywood: பாக்யா வார இதழ் டிஜிட்டல் முறையில் உருவெடுக்கிறது - துவக்க நிகழ்வு எப்போது தெரியுமா?

இதனால் பாக்யா டிஜிட்டல் முறையில் மீண்டும் ரசிகர்களை ஈர்க்க வருகிறது. வார இதழாக வந்துகொண்டிருந்த பாக்யா தற்போது டிஜிட்டலில் தினம் தோறும் செய்திகளாக வெளிவரவுள்ளது. வருகிற ஜூன் மாதம் 25 ஆம் தேதி (25:06:2023) துவங்குகிறது. பாக்யா வாசகர்கள் அனைவரும் அவர்களின் சிறு கதைகள், ஜோக்ஸ், தொகுப்புகள், கவிதைகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் பகிரலாம் என்று ஆசிரியர் பாக்யராஜ் அவர்கள் தனது யூடியூப் சேனல் மூலம் தெரிவித்துள்ளார். மிகப்பெரிய இடைவெளிக்கு பிறகு வருகிற 25 ஆம் தேதி பாக்யா வாசகர்களை சந்திப்பத்தில் தனக்கு மிக மிக மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.

ALSO READ  Thangalaan release date: விக்ரமின் தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது

Leave a Reply