Home Cinema News Sardar new update: கார்த்தியின் சர்தார் படத்தின் பற்றிய ரசிகர்களுக்கு உற்சாகமான அப்டேட்

Sardar new update: கார்த்தியின் சர்தார் படத்தின் பற்றிய ரசிகர்களுக்கு உற்சாகமான அப்டேட்

44
0

Sardar: கார்த்தி விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்கள் வெற்றி சவாரி மீது உள்ளார். மேலும் இந்த ஆண்டின் மூன்றாவது படம் வெளியாக தயார் நிலையில் உள்ளது. கார்த்தியின் அடுத்த வெளியீடாக இருக்கும் சர்தார் படம் தீபாவளி பண்டிகை அன்று (அக்டோபர் 21 ஆம் தேதி) திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் இதில் கார்த்தி பல மேக் ஓவர்களில் நடிக்கிறார். சமீபத்தில் வெளியிடப்பட்ட டீசரில் அதன் காட்சியை நாம் பார்த்தோம். இதற்கிடையில் சர்தாரின் முதல் சிங்கிள் பற்றிய ஒரு அற்புதமான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ALSO READ  Chandramukhi-2: மைசூரில் பூஜையுடன் தொடங்கிய சந்திரமுகி-2

Sardar new update: கார்த்தியின் சர்தார் படத்தின் பற்றிய ரசிகர்களுக்கு உற்சாகமான அப்டேட்

சர்தார் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக்கை கார்த்தி பாடியுள்ளார், அந்த பாடல் ‘ஏரு மயிலேறி’ என்ற வரிகளுடன் யுகபாரதி எழுதிய இந்த பாடலுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் தனது ட்வீட்டில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். ‘ஏரு மயிலேறி’ ஒரு பக்கா நாட்டுப்புற பாடலாக இருக்கும், இது நாடக கலை கலாச்சாரத்திற்கு ஒரு அடையாளமாக இருக்கும் என்று தெறிகிறது. பாடல் பதிவு ஸ்டுடியோவில் இருந்து கார்த்தியின் படங்களை ட்வீட்டரில் பகிர்ந்தர் ஜி.வி.பிரகாஷ்.

Also Read: ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் இல்லை – வெற்றிமாறனின் கருத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு!

சர்தார் படத்தை பிஎஸ் மித்ரன் இயக்கியுள்ளார் மற்றும் ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ராஷி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர், லைலா, சங்கி பாண்டே மற்றும் பலர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Leave a Reply