AK61: பொதுமக்கள் உலக அளவில் எதிர்கொள்ளும் ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினையைப் பற்றி அன்தா ப்படம் இருக்கும்.
எச். வினோத் இயக்கத்தில் அஜித் முதன் முறையாக நேர்கொண்ட பார்வை படத்தில் இணைந்து நடித்தார். அதன் வெற்றிக்கு பிறகு இந்த கூட்டணி இரண்டாவது முறையாக ‘வலிமை’ படத்தில் இணைந்தார்கள். இந்தப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள், மோஷன் போஸ்டர், மற்றும் மேக்கிங் வீடியோவை அண்மையில் வெளியாகி இருந்தன அவை ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வலிமை படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படம் நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும்படம் என்பது குறிப்பிடத்தக்கது. வலிமை படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். வலிமை படத்திற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
இந்நிலையில் ஏகே 61 படம் தகவல் கசிந்தது. மூன்றாவது முறையாக அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்கவுள்ளார் எச். வினோத். ஏகே 61 படம் குறித்து தனியார் ஊடகத்தில் எச். வினோத் அளித்த பேட்டியில் அஜித் அவர்களுக்கு இயக்குநரிடம் இருந்து ஒரு விஷயம் வேண்டும் என்று நினைத்தால், அதற்கு மறுப்பு தெரிவிக்க மாட்டார். ஒரு இயக்குனர் எவ்வளவு நேரம் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று நினைக்கிறாறோ அதற்கு அவர் தயாராகத்தான் இருப்பார்.
அவர் நடிக்கும் கதாபாத்திரத்தை நாம எப்படி வேண்டுமானாலும் உருவாக்கலாம். அதற்கு அவர் முழு சுதந்திரத்தையும் கொடுப்பார். வலிமையில் அவர் ஃபிட்டாக இருக்கவேண்டும் என்று நான் விரும்பினேன். ஒரு மகன் கதாபாத்திரத்தில் நடிக்க, தலைமுடிக்கு கருப்பு சாயம் பூசி கொள்ள சொன்னேன். கதைக்கு அது கண்டிப்பா தேவை என்பதைப் நல்ல புரிந்துகொண்டு அஜீத் அதை ஒப்புக்கொண்டார்.
எங்களது அடுத்த படத்தில் இது போல் இல்லாமல், குறைந்த ஆக்ஷன் நிறைய வசனம் இருக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். மக்கள் உலக அளவில் தற்போது எதிர்கொள்ளும் ஒரு மிக முக்கியமான சமூகப் பிரச்சினையைப் பற்றிதான் அன்தா ப்படம் இருக்கும். என்று தெரிவித்தார் எச். வினோத்.