Home Cinema News AK 62: AK 62 சர்ச்சை – கடவுளுக்கு நன்றி சொன்ன விக்னேஷ் சிவன்

AK 62: AK 62 சர்ச்சை – கடவுளுக்கு நன்றி சொன்ன விக்னேஷ் சிவன்

32
0

AK 62: சிம்பு மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த ‘போடா போடி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் பின்னர் தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்த ‘நானும் ரவுடி தான்’ என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தின் மூலம் புகழ் பெற்றார். அவரும் நயன்தாராவும் இப்படத்தின் மூலம் அறிமுகமாகி டேட்டிங் செய்ய ஆரம்பித்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2022 இல் திருமணம் செய்துகொண்டதால் இந்தப் படம் அவருக்கு தனிப்பட்ட முறையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

AK 62: AK 62 சர்ச்சை - கடவுளுக்கு நன்றி சொன்ன விக்னேஷ் சிவன்

சமீபத்தில் விக்னேஷ் சிவன், லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் ‘ஏகே 62’ படத்தில் அஜித்குமாரை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இருப்பினும் பல மாதங்களுக்கு முன் விக்னேஷ் சிவன் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன் பின் அதை பற்றின மிகப்பெரிய சர்ச்சைகள் தமிழ் சினிமாவில் எழுந்தன. தற்போது அந்த சர்ச்சைகள் சற்று ஓய்ந்த நிலையில்

ALSO READ  Indian 2: இந்தியன் 2 படப்பிடிப்பிற்காக கமல்ஹாசன் ஹெலிகாப்டரில் கிராண்ட் என்ட்ரி - வைரலாகும் வீடியோ

AK 62: AK 62 சர்ச்சை - கடவுளுக்கு நன்றி சொன்ன விக்னேஷ் சிவன்
‘AK 62’ சர்ச்சைகளுக்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். ஏனெனில் இது அவரது தனிப்பட்ட வாழ்க்கையை குறிப்பாக அவரது இரண்டு இரட்டை மகன்களுடன் இருப்பதற்கான நேரத்தை கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும் “கடவுளுக்கும், இந்த கடினமான காலங்களில் நான் சந்தித்த அன்பான மனிதர்களுக்கும் நன்றி, உங்கள் அரவணைப்பு மற்றும் என் மீதான நம்பிக்கை என்னைக் கண்டறிய உதவியது மட்டுமல்லாமல், இந்த எதிர்பாராத, நிச்சயமற்ற சூழலில் உயிர்வாழ எனக்கு நம்பிக்கையையும் அளித்தது! இன்று, நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது குடும்பத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் சில இனிமையான ரசிகர்களுக்கு நன்றி”.

ALSO READ  Indian 2 vs RC15: 2024 பொங்கலுக்கு மோதவுள்ள ஷங்கர் vs ஷங்கர்!

“என் குழந்தைகளுடன் அனைத்து தருணங்களையும் சுவாசிக்கவும் உணரவும் சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி !!! நாம் படும் அனைத்து வலிகளிலும் நிறைய நன்மை இருக்கிறது. பாராட்டும் வெற்றியும் நமக்குக் கற்பிப்பதை விட வாழ்க்கையும் அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவமும் நிறைய கற்றுக்கொடுக்கிறது! என்று கூறியுள்ளார் விக்னேஷ் சிவன்.

Leave a Reply