Home Cinema News Lal Salaam: லால் சலாம் படத்திற்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர் ரகுமான் – வைரல்...

Lal Salaam: லால் சலாம் படத்திற்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர் ரகுமான் – வைரல் வீடியோ

18
0

Lal Salaam: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிக்கும் லால் சலாம் படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர் ரகுமான் இசையமைக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் தங்களது வரவிருக்கும் ‘லால் சலாம்’ படத்தில் மீண்டும் இணைகிறார்கள் என்று லைகா புரொடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டு படம் என்று கூறப்படும் இப்படத்தை ஐஸ்வர்யா ரஜினி இயக்குகிறார், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

ALSO READ  Shocking! 'தளபதி 68' படத்திற்க்கு பின் மூன்று வருடங்கள் நடிப்பில் இருந்து விலகுவாரா விஜய்?

Also Read: தளபதி விஜய்யின் வாரிசு படத்தில் சிம்பு இணைகிறாரா?

மகள் ஐஸவர்யா இயக்கத்தில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடிக்கயுள்ள லால் சலாம் திரைபடத்தின் பூஜை நவம்பர் 5 ஆம் தேதி நடந்தது. தற்போது ​​ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தின் இசையமைப்பில் பிஸியாக உள்ளனர். ரகுமான் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்திற்காக இசையமைப்பில் பிஸியாக இருக்கும் ஒரு சுவாரஸ்யமான வீடியோ களிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏ. ஆர் ரகுமான் பகிர்ந்துள்ளார்.

ஆஸ்கார் நாயகன், “மும்பையில் லால்சலாம். தமிழ் படத்திற்காக மிகவும் நம்பிக்கைக்குரிய பெண் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினியுடன் ஜாம்மிங்” என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. லால் சலாம் படத்தின் வழக்கமான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவாளராகவும், பிரவின் பாஸ்கர் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.

Leave a Reply