Home Cinema News Samantha: சமந்தா ஐஸ்கட்டி நிரம்பிய குளியல் தொட்டியில் டார்ச்சர் தெரபிக்கு உள்ளான புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில்...

Samantha: சமந்தா ஐஸ்கட்டி நிரம்பிய குளியல் தொட்டியில் டார்ச்சர் தெரபிக்கு உள்ளான புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

51
0

Samantha: முன்னணி நடிகையான சமந்தா ருத் பிரபு, தி ரூசோ பிரதர்ஸ் தயாரித்து இயக்கும் ராஜ் மற்றும் டிகேவின் பிரபல ஹாலிவுட் வெப் சீரிஸ் ‘சிட்டாடல்’ என்ற ஹிந்தி பதிப்பில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் தான் சாகுந்தலம் என்ற மிக பெரிய புராண திரைப்படம் வெளியானது. ஆனால் அப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. ஆட்டோ இம்யூன் நோயான மயோசிடிஸுக்கு எதிரான போரில் பல்வேறு சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு நீண்ட இடைவெளியில் பின் மீண்டும் படங்களில் கம்மிட்டாக தொடங்கியுள்ளார்.

ALSO READ  Vettaiyan: வேட்டையன் வழக்கமான ரஜினிகாந்த்தின் படம் அல்ல என்கிறார் ராணா

Samantha: சமந்தா ஐஸ்கட்டி நிரம்பிய குளியல் தொட்டியில் டார்ச்சர் தெரபிக்கு உள்ளான புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில வாரங்களில் சமந்தா ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி முறையில் இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து அவரது ரசிகர்களை சந்தோஷ படுத்தினார். ஆனால் சமீபத்திய படம், ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பெரிய பனிக்கட்டிகளால் நிரப்பப்பட்ட குளியல் தொட்டியில் இருப்பதைக் காட்டுகிறது மற்றும் அதற்கு “இது சித்திரவதை நேரம்” (Torture time) என்று தலைப்பிடப்பட்டது, அதைத் தொடர்ந்து #Icebathrecovery மற்றும் #actionmodeon” என்ற ஹேஷ்டேக்குகள் உள்ளன.

ALSO READ  Aditi Shankar: ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் தெலுங்கில் அறிமுகம்

Samantha: சமந்தா ஐஸ்கட்டி நிரம்பிய குளியல் தொட்டியில் டார்ச்சர் தெரபிக்கு உள்ளான புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நோயில் இருந்து முழுமையாக குணமடைய சமந்தாவின் துணிச்சலான முயற்சிகளை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஐஸ் குளியல் பாரம்பரியமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கடுமையான உடற்பயிற்சிகளுக்குப் பிறகு தசைகளை எளிதாக்கவும் அறியப்படுகிறது. இந்த செயல்முறை சித்திரவதையாக இருந்தாலும், சமந்தா அதன் நன்மைகளை வெளிப்படுத்தியதால் நெடிசன்ஸ் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply