Home Cinema News மீண்டும் சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி மோதல்

மீண்டும் சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி மோதல்

16
0

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படமும் விஜய் சேதுபதியின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படமும் ஒரே நாளில் திரைக்கு வார உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sivakarthikeyan

சிவகார்த்திகேயன் தற்போது அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி ச்சக்கரவர்த்தி இயக்கும் ‘டான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். டான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே  நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவர்களாக நடிக்கின்றனர். சூரி மற்றும் சிவகார்த்திகேயன் கல்லூரி நண்பர்களாக நடிக்கின்றனர். பிரியங்கா அருள்மோகன் நாயகியாக நடிக்கின்றனர். மற்றும் இந்த படத்தில் புகழ், எஸ்.ஜே.சூர்யா, ஷிவாங்கி, காளி, வெங்கட் உள்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடேக்சன்ஸ் தயாரித்து வருகிறது.

Sivakarthikeyan

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ இப்படத்தில் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ளார். நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் இணைந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளனர். தற்போது இந்தப்படத்தின் போஸ்ட் புரொடேக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடி தான் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி, நயன்தாரா இருவரும் இரண்டாவது முறையாக நடித்து வருவதால். மேலும் இந்தப்படத்தில் சமந்தாவும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

Don

தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி விஜய் சேதுபதியின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படமும் பிப்ரவரி மாதம் ரிலீசாக உள்ளதாம். மற்றும் சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு ‘டான்’ படம் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பாக ரெமோ – றெக்க மற்றும் சூது கவ்வும் – எதிர் நீச்சல் படங்கள் ஒரே நாளில் வெளியானது குறிப்பிடத்தகது.

ALSO READ  RC15: ஷங்கர் இயக்கும் RC 15 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது

Leave a Reply