லோக்கேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படம் கொரோனா அச்சுருத்தலால் வெளியிடாமல் உள்ளது.தளபதி விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படத்திற்காக மிகுந்த ஆவலுடன் காத்திருகின்றனர்.
இந்த படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிக்கா மோகன், ஷாந்தனு உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருப்பதால் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீது அதிக ஆர்வம் உள்ளது. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்த படத்தின் ஓட்டுமொத்த வெளியீட்டு உரிமையும் லலித் குமார் கைப்பற்றியுள்ளார். மாஸ்டர் படத்தை ஜனவரி 13 ஆம் தேதி வெளியிட மாஸ்டர் படக்குழு திட்டமிட்டுள்ளது.
தணிக்கையில் ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம். மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளது. ஒரு படம் வெளிநாடுகளில் உள்ள திரையரங்குகளில் வெளியாகும்போது, அதன் இணையத்தில் படத்தின் கதைச் சுருக்கத்தை வெளியீட்டிருபார்கள். அவ்வாறு மாஸ்டர் வெளியாகவுள்ள திரையரங்கின் இணையம் ஒன்றில் கதை சுருக்கம் வெளியாகியுள்ளது.
கதை சுருக்கம்
மதுவுக்கு அடிமையாக இருக்கும் இளம் பேராசிரியரான விஜய், அதிலிருந்து மீள, 3 மாதம் சீர்திருத்த இல்லம் ஒன்றில் ஆசிரியராக பணிபுரிய அனுப்படுகிறார். அந்த இல்லம் விஜய் சேதுபதியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவர் அந்த இல்லத்தில் இருக்கும் சிறுவர்களைத் தனது சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திகிறார். அங்கு வரும் விஜய்க்கும், விஜய் சேதுபதிக்கும் இடையே நடக்கும் மோதலே இந்த படம்.
இவ்வாறு திரையரங்க இணையத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த மாஸ்டர் படத்தின் கதையை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பலரும் பகிர்ந்ததால் திரையரங்க இணையத்திலிருந்து கதைச் சுருக்கம் நீக்கபட்டது.