Home Cinema News தவிர்க்க இயலாத காரணகளால் ‘மாநாடு’ படம் ஒத்திவைப்பு: வலியோடு தெரிவித்த சுரேஷ் காமாட்சி

தவிர்க்க இயலாத காரணகளால் ‘மாநாடு’ படம் ஒத்திவைப்பு: வலியோடு தெரிவித்த சுரேஷ் காமாட்சி

55
0

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாநாடு. யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்த இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ். ஜே சூரியாவும் நடித்துள்ளார்.

Simbu

நாளை (25:11:2021) வெளியாகயிருந்த மாநாடு படம் தற்பொழுது ஒத்திவைக்கபட்டுள்ளது. இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் ரஜினியின் அண்ணாத்தே படம் ரிலீஸ் ஆனதால் மாநாடு படம் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார் இதற்கான புரொமோஷன் வேலைகள் தொடங்கியது மட்டுமல்லாமல் டிகெட் முன்பதிவு நடைபெற்றது.

ALSO READ  Official: விஜய்யின் வாரிசு விநியோகஸ்தர் உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் மூவிஸ்

இந்தநிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுளதாவது: “நிறைய கனவுகளோடு படைக்க பட்ட ஓர் படைப்பு. இதன் பிரசவத்ததை எதிர்நோக்கி காத்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணத்தால் இப்படத்தின் ரீலீஸ் தேதி ஒத்திவைக்கபடுகிறது என்று மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

Simbu

வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்.”  என பதிவிட்டுள்ளார். சுரேஷ் காமாட்சியின் இந்த திடீர் அறிவிப்பு சிம்பு ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றதை தந்துள்ளது. 

ALSO READ  Kaithi 2: லோகேஷ் கனகராஜின் 'கைதி 2' LCU நடிகர்களுடன் உற்சாகத்தை உருவாக்குகிறது!

Leave a Reply