தளபதி விஜயின் மாஸ்டர் படத்திற்கு பிறகு அவரின் அடுத்த படத்தை யார் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது. மாஸ்டர் படைத்திற்காக தளபதி விஜய் ரசிகர்கள் காத்துகொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் விஜயின் 65 ஆவது படத்தை இயக்குவதற்காக ஏ. ஆர் முருகதாஸ் விஜயிடம் கதை கூறியிருகிறார். அது துப்பாக்கி -2 வாக இருக்கலாம் என்று பேசப்பட்டது. ஆனால் ஏ. ஆர் முருகதாஸ் பட்ஜெட் சிக்கலால் வெளியே வந்த நிலையில், தற்போது சிவகார்திகேயனை சந்தித்து கதைசொல்லி இருக்கிறார்.
Also Rad: அஜீத் ‘வரலாறு’ படத்தின் பிறகு ‘வலிமை’ படத்தில் கையாளும் சென்ட்டிமென்ட்
முருகதாஸ் வெளியேற்றதிற்கு பிறகு பல இயக்குனர்களிடமிருந்து கதை கேட்டு வந்த தளபதி விஜய் கடசியாக கோலமாவு கோக்கிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்சஸ் தயாரிப்பில் நடிக்க உள்ளார். அதுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சன் பிக்சர்ஸ்சிடமிருந்து கடந்த வாரம் வெளியானது.
இந்த நிலையில் தான் இயக்குனர் முருகதாசும் நடிகர் சிவகார்த்திகேயனும் சமீபத்தில் சந்தித்துள்ளார்கள். சிவகார்த்திகேயனும் ‘அயலான்’ ‘டாக்டர்’ ஆகிய இரண்டு படங்களுக்கு பிறகு வேற எந்த படத்தையும் கமிட் செய்யவில்லை.
Also Read: தற்போது இருக்கும் அரசியல் சூழல் கருதி அண்ணாத்த படக்குழுவுக்கு வேண்டுகோள் விடுத்தார் ரஜினி
இந்த நிலையில் இயக்குனர் முருகதாஸ் சிவகார்த்திகேயனை சந்தித்தது கோலிவுட் வட்டாரதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே முருகதாஸ் கதை எழுதி தயாரித்த ‘மான் கராத்தே’ படத்தில் சிவகார்த்திக்கேயன் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் இயக்குனர் முருகதாசுடன் பணிபுரிய வேண்டும் அது தனது ஆசையாக இருப்பதாகவும் சில இடங்களில் சிவகார்த்திகேயன் கூறி இருந்தார்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் முருகதாஸ் கூட்டணியில் புதிய படம் அமைய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறபடுகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது