Home Cinema News காலேஜ் மாணவனாக மாறிய சிவகார்த்திகேயன்… ‘டான்’ பர்ஸ்ட் லுக் வெளியானது

காலேஜ் மாணவனாக மாறிய சிவகார்த்திகேயன்… ‘டான்’ பர்ஸ்ட் லுக் வெளியானது

57
0

சிவகார்த்திகேயன் நடிப்பில், அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர். 

காலேஜ் மாணவனாக மாறிய சிவகார்த்திகேயன்... 'டான்' பர்ஸ்ட் லுக் வெளியானது

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பினை பெற்றது. தற்போது அறிமுக இயக்குனர்  சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘டான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ALSO READ  PS 2: பொன்னியின் செல்வன் 2 படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ இந்த தேதியில் வெளியாக உள்ளது

ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் ‘டான்’ படத்திற்கான பூஜை போடப்பட்டு, முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. கொரோனா இரண்டாம் அலை அச்சத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட சிவகார்த்திகேயனின் ‘டான்’ படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சென்னையில் துவங்கியது. அதனை தொடர்ந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு அண்மையில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

ALSO READ  Kollywood: அஜித் குமாரின் 'விடாமுயற்சி' படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளார்

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி ஆகிய இருவரும் கல்லூரி மாணவர்களாக நடிக்கின்றனர். பிரியங்கா அருள்மோகன் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் புகழ், ஷிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா, காளி வெங்கட் உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடேக்சன்ஸ் தயாரித்து வருகிறது.

Leave a Reply