Home Cinema News இயக்குனர் சிவா வீட்டிற்க்கு சென்று சர்ப்ரைஸ் குடுத்த ரஜினிகாந்த்ன

இயக்குனர் சிவா வீட்டிற்க்கு சென்று சர்ப்ரைஸ் குடுத்த ரஜினிகாந்த்ன

18
0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் சிவா வீட்டிற்கு சென்று சர்ப்ரைஸ் கொடுத்ததோடு தங்க செயின் பரிசாக கொடுத்துள்ளார்.

Rajinikanth
 
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார். டி.இம்மன் இசையமைத்திருக்கும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, என்று பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த ஆண்டு தீபாவளி பரிசாக வெளியான அண்ணாத்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வாங்கியுள்ளது. உலகளவில் இந்தப்படம் 240 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்ததோடு இன்னும் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
அண்ணாத்த படம் வெற்றியை தொடர்ந்து பட குழுவினர் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் சிவாவை தனது போயஸ் கார்டன் இல்லத்துக்கு அழைத்து கட்டியணைத்து சால்வை அணிவித்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில் திடீர் என்று சென்னை அண்ணா நகரில் இருக்கும் இயக்குநர் சிவா வீட்டிற்கே சென்று சர்ப்ரைஸ் ஷாக் தந்ததோடு தங்க செயின் பரிசாக கொடுத்துள்ளார் ரஜினிகாந்த்.
அதோடு சிவாவுடன் மூன்று மணிநேரம் உரையாடி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
ALSO READ  Project K: ப்ராஜெக்ட் கே இரண்டு பகுதிகளாக வெளியிடப்படும் - இதோ தேதிகள்!

Leave a Reply