Home Cinema News அஜீத் ‘வரலாறு’ படத்தின் பிறகு ‘வலிமை’ படத்தில் கையாளும் சென்ட்டிமென்ட்

அஜீத் ‘வரலாறு’ படத்தின் பிறகு ‘வலிமை’ படத்தில் கையாளும் சென்ட்டிமென்ட்

45
0

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. கொரோனா வைரஸ் என்பதால் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பை கடந்த அக்டோபர் மாதம் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் துவங்கினார்கள்.

Pocket Cinema News

மீண்டும் துவங்கிய படப்பிடிப்பின்போது பைக் ஸ்டண்ட் காட்சியில் அஜித் பைக்கில் இருந்து கீழே விழுந்து காயம் ஏற்பட்டது. திட்டமிட்டபடி ஷெட்யூலை முடிக்க வேண்டும் என்று காயத்தையும் பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்துள்ளார் அஜித்.

Also Read: சண்டை காட்சிகள் காரணம் காட்டி ‘மாஸ்டர்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் அளிக்க மறுத்த தணிக்கை குழு

ALSO READ  Avatar 2 OTT: அவதார் 2 படத்தின் OTT வெளியீட்டு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்நிலையில் வலிமை படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வலிமை படத்தில் அம்மா, மகன் சென்டிமென்ட் காட்சி இருக்கிறதாம். மேலும் தாய்மையை கொண்டாடும் வகையில் ஒரு பாடலும் வைத்துள்ளார்களாம். அம்மா-மகன் பாசம், காதல் என்று பலதரப்பட்ட எமோஷன்களும் இருக்கிறதாம்.

Also Read: தற்போது இருக்கும் அரசியல் சூழல் கருதி அண்ணாத்த படக்குழுவுக்கு வேண்டுகோள் விடுத்தார் ரஜினி

வலிமையில் அஜித்துக்கு அம்மாவாக சீனியர் நடிகை சுமித்ரா நடிக்கிறாராம். அஜித் சமீப காலமாக தங்கச்சி, மகள், தம்பி சென்டிமென்ட படங்களில் தான் நடித்து வருகிறார்.

Pocket Cimena News

2006ம் ஆண்டு கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வரலாறு படத்தில் தான் அம்மா, மகன் சென்டிமென்ட் இருந்தது. அதன் பிறகு 14 ஆண்டுகள் கழித்து வலிமை படத்தில் அஜீத் அந்த சென்டிமென்ட் கையாளுகிறார்.

ALSO READ  D50: தனுஷின் இயக்கத்திற்கு பாராட்டு மழை பொழிந்தார் SJ சூர்யா

Also Read: சூரியாவுடன் சைக்கிள் பயணம் செய்த தல அஜீத்… வைரலாகும் புகைப்படம்

இப்படத்தில் வரும் முக்கியமான காட்சிகளை வெளிநாட்டில் மட்டும் தான் படமாக்க முடியும் என்று வினோத் தெரிவித்தார். இந்நிலையில் புத்தாண்டு ஸ்பெஷலாக வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply