Home Cinema News கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக விக்ரம் படத்தில் மிகப்பெரிய மாற்றம்

கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக விக்ரம் படத்தில் மிகப்பெரிய மாற்றம்

46
0
கமல்ஹாஸன் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் விக்ரம் படத்தில் பெரும் மாற்றம்.
Kamal Haasan

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாஸன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்கிறார். தற்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்ட நிலையில் விக்ரம் படத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது படகுழு. இது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்த  கமல்ஹாஸன் தொடர்ந்து இரும்பில் இருந்ததன் காரணமாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனையில் கொரோனா பாசிடிவ் என்று வந்த நிலையில் அவர் சென்னையில் உள்ள ராமசந்திர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதுமட்டும் அல்லது இவர் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் கமல் சார்பாக தொகுத்து வழங்கினார்.
அப்போது மருத்துவமனையில் இருந்தவாறு கமல் லைவில் பேசினார்.
அனைவரும் இந்த கொரோனா காலத்தில் பத்திரமாக இருக்க வேண்டும் என்று ஒரு மக்கள் பிரதிநிதியாக அறிவுறுத்தினார். விஜய்சேதுபதி மாஸ்டர் படத்தில் விஜய்க்கு விலனாக நடித்தது போல் இந்த விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்கிறார்.
இந்த நிலையில் தற்போது விக்ரம் படத்தில் ஏற்பட்ட மாற்றம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கமலுடன் விஜய்சேதுபதி சண்டையிடுவதற்கான பிரம்மாண்ட செட் பொள்ளாச்சியில் போடபட்ட நிலையில் தற்போது கமலுக்கு கொரோனா தொற்று வந்ததன் காரணமாக அந்த சண்டை காட்சியை சென்னையில் பின்னி மில்லில் படமாக்க படாகுழு திட்டமிட்டுள்ளதாம். கமல் முழுமையாக குணமடைந்த பின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
ALSO READ  நேர்கொண்ட பார்வை இவ்வளவு விலை தெரியுமா?

Leave a Reply