Salaar worldwide box office collection day 11: பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சலார்: பார்ட் 1 – போர் நிறுத்தம்’ திரைப்படம் கடந்த 10 நாட்களாக வசூல் சாதனைகளை முறியடித்து வருகிறது. டிசம்பர் 22 அன்று பிரபாஸின் ‘சலார்: பகுதி 1 – போர் நிறுத்தம்’ பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியானது. தற்போது தயாரிப்பாளர்களின் கூறியது படி பிரசாந்த் நீல் இயக்கிய சலார் உலகம் முழுவதும் ரூ.625 கோடி கிளப்பில் நுழைந்து பாக்ஸ் ஆபிஸில் இன்னும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. புத்தாண்டான ஜனவரி 1 அன்று இந்த படம் வசூலில் சிறிது வளர்ச்சியைக் கண்டது. இந்தியாவில் ரூ 15 கோடிக்கு மேல் வசூல் செய்தது. 11 நாள் முடிவில் மொத்த வசூல் இப்போது இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ 360.77 கோடியாக உள்ளது.
சலார்: பகுதி 1 – போர் நிறுத்தம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 11
- இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் ரூ.15 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.
- உலகம் முழுவது ரூ.17 கோடி வரை வசூலித்துள்ளது.
சலார்: பகுதி 1 – போர் நிறுத்தம் இதுவரை பாக்ஸ் ஆபிஸ் வசூல்
- இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் ரூ.360.77 கோடி வரை வசூலித்துள்ளது.
- உலகம் முழுவதும் ரூ.625 கோடியை கடக்க உள்ளது.
‘சலார்: பகுதி 1 – போர்நிறுத்தம்’ படத்தை ‘கேஜிஎஃப்’ (KGF) புகழ் பிரசாந்த் நீல் எழுதி இயக்கிய இப்படத்தி பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் ஆகியோரின் முதல் கூட்டணியைக் குறிக்கிறது. இவர்களைத் தவிர, இப்படத்தில் ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, மைம் கோபி, ஸ்ரீயா ரெட்டி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்துள்ள ‘சலார்’ திரைப்படம் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பாக்ஸ் ஆபிஸ் தரவு பல்வேறு ஆதாரங்களின் படி எங்களின் சொந்த ஆராய்ச்சியின் மூலம் தொகுக்கப்பட்டுள்ளது. இந்தத் தரவு தோராயமாக இருக்கலாம் மற்றும் தரவின் நம்பகத்தன்மை குறித்து தமிழ் பாக்கெட் நியூஸ் எந்த பொறுப்பை ஏற்காது. பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றி மற்றும் சமீபத்திய செய்திகளுக்கு எங்கள் தமிழ் பாக்கெட் நியூஸில் இணைந்திருங்கள்.