PS2 box office collection: பொன்னியின் செல்வன்: பாகம் 2 பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஏப்ரல் 28 அன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உலக முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பார்வையாளர்களிடமிருந்து வரவேற்ப்பை பெற்று வருகிறது. இப்படம் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில் மணிரத்னம் இயக்கியுள்ளார்.
இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்: பாகம் 2 உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் பிரமாண்டமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மூன்றே நாட்களில் உலகம் முழுவதும் இப்படம் ரூ. 150 கோடியை தாண்டியது என்ற செய்திகள் வந்துள்ளது. உள்நாட்டு வசூல் மட்டுமின்றி சர்வதேச பாக்ஸ் ஆபிஸிலும் இப்படம் பெரும் வசூலை ஈட்டி வருகிறது. இந்த படம் லைகா புரொடக்ஷனுக்கு பெரிய லாபகரமான படமாக அமைந்துள்ளது. மேலும் படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.
#PonniyinSelvan2 has crossed 150 Crs gross at the WW Box office in 3 days.. 🔥
— Ramesh Bala (@rameshlaus) May 1, 2023
வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா கூறுகையில், பொன்னியின் செல்வன்: பார்ட் 2 மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூலித்துள்ளது. வரும் வார நாட்களில் வசூல் எப்படி இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.