Kalki 2898 AD Box Office Collection Day 2: கல்கி 2898 AD வியாழன் அன்று வெளியாகி உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரூ.191.5 கோடி வசூல் செய்தது. கல்கி 2898 AD அதன் இரண்டாவது நாளில் பெரும் சரிவைச் சந்தித்ததாக சாக்னில்க் கூறுகிறார். கல்கி 2898 AD இந்தியாவில் அதன் முதல் நாளில் ரூ.95.3 கோடியை வசூலித்தது, ஆனால் இரண்டாவது நாளில் படத்தின் வசூல் 43 சதவீதத்திற்கும் மேல் சரிந்தது ரூ.54 கோடி வசூலித்தது. மேலும் படத்தின் தெலுங்கு பதிப்பில் பெரும் சரிவு காணப்பட்டது. இப்படம் முதல் நாளில் தெலுங்கில் ரூ.65.8 கோடியை வசூலித்த நிலையில், இரண்டாவது நாளில் ரூ 25.65 கோடி வசூலித்துள்ளது. அறிக்கையின்படி படம் 2 நாளில் இந்தியாவில் ரூ.54 கோடி மற்றும் உலகளவில் ரூ.107 கோடியாக வசூலித்தது.
நாக் அஸ்வினின் பிரம்மாண்டமான இயக்கத்தில் தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், சாஸ்வதா சட்டர்ஜி மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை 600 கோடி ரூபாய் செலவில் தயாரித்ததாக கூறப்படுகிறது. இதுவரை உலகம் முழுவதும் ரூ.298.50 கோடி வரை வசூலித்தாக வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், ஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச் ஒளிப்பதிவு செய்துள்ளார், கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
The love is pouring in from all corners of the world! ❤️🔥#Kalki2898AD #EpicBlockbusterKalki @SrBachchan @ikamalhaasan #Prabhas @deepikapadukone @nagashwin7 @DishPatani @Music_Santhosh @VyjayanthiFilms @Kalki2898AD @saregamaglobal @saregamasouth pic.twitter.com/kHDLpBicyb
— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) June 29, 2024
‘கல்கி 2898 AD’ பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 2
- இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் ரூ.54 கோடி வசூலித்தது.
- உலகம் முழுவது ரூ.107 கோடி வரை வசூலித்துள்ளது.
‘கல்கி 2898 AD’ இதுவரை பாக்ஸ் ஆபிஸ் வசூல்
- இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் ரூ.149.30 கோடி வரை வசூலித்துள்ளது.
- உலகம் முழுவதும் ரூ.298.50 கோடி வரை வசூலித்துள்ளது.
இந்த பாக்ஸ் ஆபிஸ் தரவு பல்வேறு ஆதாரங்கள் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது. இந்தத் தரவுகள் தோராயமானவை மற்றும் தரவின் நம்பகத்தன்மை குறித்து பாக்கெட் சினிமா நியூஸ் எந்தவிதமான பொறுப்பை ஏற்காது. பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றி மற்றும் சமீபத்திய செய்திகளுக்கு எங்கள் பாக்கெட் சினிமா நியூஸில் இணைந்திருங்கள்.