Home Cinema News Official: விஜய் நடித்த வாரசுடு (வாரிசு) படத்தின் புதிய வெளியீட்டு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

Official: விஜய் நடித்த வாரசுடு (வாரிசு) படத்தின் புதிய வெளியீட்டு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

0

Varisu: விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா முக்கிய வேடங்களில் நடித்துள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் வாரிசு. ஜனவரி 11, 2023 அன்று திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது. மேலும் இப்படம் அஜித்தின் துணிவு படத்துடன் பாக்ஸ் ஆபீஸில் மோத தயார் நிலையில் உள்ளது. ஆனால், படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியீட்டில் குழப்பம் இருந்த நிலையில் இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

Official: விஜய் நடித்த வாரசுடு (வாரிசு) படத்தின் புதிய வெளியீட்டு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்நிலையில் இன்று காலை தில் ராஜு, வம்ஷி பைடிபள்ளி மற்றும்படக்குழுவினர் சிலர் செய்தியாளர்களை சந்தித்தனர். தமிழ் மொழியின் வாரிசு படம் வெளியாகி மூன்று நாட்களுக்குப் பிறகு தெலுங்கு மொழியின் வாரசுடு ஜனவரி 14, 2023 அன்று திரையரங்குகளில் வரும் என்று படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு உறுதிப்படுத்தியுள்ளார்.

வாரிசு/வாரசுடு படத்தில் ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷாம், குஷ்பு, சரத்குமார், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மலையாளம் மற்றும் இந்தியில் திரைக்கு வருவதை உறுதி செய்த இந்த படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார்.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version