Home Cinema News Varisu VS Thunivu: வாரிசு மற்றும் துணிவு ஒரே நாளில் மோதல் – இரு தயாரிப்பாளர்களின்...

Varisu VS Thunivu: வாரிசு மற்றும் துணிவு ஒரே நாளில் மோதல் – இரு தயாரிப்பாளர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ

0

Varisu VS Thunivu: நேற்று மாலை 5 மணிக்கு தளபதி விஜய்யின் வாரிசு படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் தில் ராஜு ட்விட்டர் பக்கத்தில் வாரிசு படம் ஜனவரி 11 ஆம் தேதி பெரிய திரைகளில் வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

Also Read: அஜித்தின் துணிவு இந்த தேதியில் வெளியாகும் – உறுதி செய்த தயாரிப்பாளர்

மறுபுறம் அஜித்தின் துணிவு படக்குழுவும் படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த நிலையில் இப்போது வாரிசு தயாரிப்பாளா இந்த அறிக்கையால் ரசிகர்கள் மற்றும் சாதாரண பார்வையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு பெரிய நட்சத்திரங்கள் ஒரே நாளில் பாக்ஸ் ஆபீஸ் மோதலில் யார் வின்னர் என்று தெரிய பொறுத்து இருந்து தான் பார்க்கணும்.

இப்போது ரசிகர்கள் மிகவும் தீவிர ஆர்வம் காட்டி வரும் நிலையில் பாக்ஸ் ஆபிஸில் எந்த நட்சத்திரம் முன்னிலை வகிக்கிறது என்பதைப் பார்க்க ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் விண்ணை எட்டியுள்ளது. வம்ஷி பைடிப்பள்ளி வாரிசு படத்தை இயக்குகிறார், எச்.வினோத் துணிவு படத்தை இயக்குகிறார். அஜித்தின் படம் ஒரு திருட்டு த்ரில்லர், அதே சமயம் விஜய் நடித்த வாரிசு ஒரு சுத்தமான குடும்ப பொழுதுபோக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version