Home Cinema News VTK Trailer & Audio: வெந்து தணிந்தது காடு படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு...

VTK Trailer & Audio: வெந்து தணிந்தது காடு படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா

0

VTK Trailer & Audio: சிம்பு நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக ‘வெந்து தணிந்தது காடு’ உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான ‘மாநாடு’ படம் அனைத்து தரப்பினரிடம் அமோக வரவேற்பை பெற்றது சிம்பு ரசிகர்கள் அடுத்த படத்திற்கு ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

Also Read: தனுஷ் தனது அடுத்த படப்பிடிப்பை இந்த தேதியில் தொடங்குவார் – ஹாட் அப்டேட்

‘வெந்து தணிந்தது காடு’ படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் பேனரில் ஐசரி.கே.கணேசன் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை வெளியிடுகிறது. திரைப்படம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வர உள்ளது. தற்போது புதிய தகவல் படி வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ செய்தி தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார்.

VTK Trailer & Audio: வெந்து தணிந்தது காடு படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 2ஆம் தேதி) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் படக்குழுவினர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிரம்மாண்டமான மேடையில் நடைபெறவுள்ளது. இந்த ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவிற்க்கு உதயநிதி மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version