Home Cinema News Thrisha: பொன்னியின் செல்வன் 2’க்குப் பிறகு த்ரிஷாவின் அடுத்த இரண்டு பாகங்கள் கொண்ட புதிய தகவல்

Thrisha: பொன்னியின் செல்வன் 2’க்குப் பிறகு த்ரிஷாவின் அடுத்த இரண்டு பாகங்கள் கொண்ட புதிய தகவல்

0

Thrisha: பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்த நடிகை த்ரிஷா சிறிது காலம் பட வாய்ப்புகள் இல்லாமல் மார்கெட்டில் சரிந்தபடி காணப்பட்டார். 2018 இல் விஜய் சேதுபதியுடன் நடித்த ’96’ படத்தின் மூலம திடமான கம்பேக் கொடுத்தார். அதன் பிறகு மணிரத்னத்தின் காவியமான வரலாற்று கற்பனையான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவையின் ரோலில் அவர் நடித்தது ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் பேசபட்டது. இப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் முதலிடத்தைப் பிடித்தது, மேலும் அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி அதன் தொடர்ச்சி வெளியாகிறது.

நடிகை த்ரிஷா ஏப்ரல் 5 முதல் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி விஜய்யின் ‘லியோ’ படத்திற்கான படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவார் மற்றும் கிட்டத்தட்ட அடுத்த இரண்டு மாதங்களுக்கு படப்பிடிப்பு நடக்கும் என்று கூறப்படுகிறது. மோகன் லால் நடிக்கும் த்ரிஷாவின் அடுத்த படமான ‘ராம்’ படத்தின் படப்பிடிப்பும் இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தொடங்கும் என்று தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

Thrisha: பொன்னியின் செல்வன் 2'க்குப் பிறகு த்ரிஷாவின் அடுத்த இரண்டு பாகங்கள் கொண்ட புதிய தகவல்

‘த்ரிஷ்யம்’ புகழ் ஜீத்து ஜோசப் இயக்கிய ‘ராம்’ ஏற்கனவே கடந்த ஆண்டு ஒரு நீண்ட ஷெட்யூலை முடிக்க பெரிய இடைவெளி ஏற்பட்டது. இப்போது அடுத்த ஷெட்யூல் 50 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது, அதில் 25 நாட்கள் துனிசியாவிலும், 10 நாட்கள் இங்கிலாந்திலும், 10 நாட்கள் புது டெல்லியிலும் இருக்கும். மீதி ஐந்து நாட்களை ஏதேனும் பேட்ச் ஒர்க்கிற்காக ஒதுக்கி இருக்கிறார்கள். ‘ராம்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும், மேலும் ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்குப் பிறகு த்ரிஷாவின் இரண்டாவது மிகபெரிய படமாகும். இப்படத்தில் மோகன்லால், த்ரிஷா, சம்யுக்தா மேனன், சாய் குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இது இதுவரை பார்த்திராத த்ரில்லர் சப்ஜெக்ட் என்று இந்திய பார்வையாளர்களை திருப்திபடுத்தும் என்று கூறப்படுகிறது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version