Home Cinema News Thiruchitrambalam: உலகளவில் திருச்சிற்றம்பலம் 2ஆம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

Thiruchitrambalam: உலகளவில் திருச்சிற்றம்பலம் 2ஆம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

0

Thiruchitrambalam: நடிகர் தனுஷின் சமீபத்திய காதல் நகைச்சுவை மியூசிக்கல் என்டர்டெய்னர் திருச்சிற்றம்பலம் படம் ஆகஸ்ட் 18 அன்று நல்ல விமர்சனங்களுடன் திரைக்கு வந்தது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் நடிக்க மற்றும் தோழியாக நித்யா மேனன் ஆகிய மூன்று கதாநாயகிகளாக நடித்துள்ளனர். தொடர்ச்சியான OTT வெளியீடுகளுக்குப் பிறகு, தனுஷின் திருச்சிற்றம்பலம் மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையரங்குகளில் திரையிடப்பட்டது. படத்தின் வெற்றியால் நடிகர் தனுஷ் மீண்டும் விட்ட இடத்தை பிடித்துள்ளர்.

தனுஷ் டைட்டில் ரோலில் நடித்திருக்கும் இப்படம் ஒரு ஃபீல் குட் ஃபேமிலி டிராமா என்று கூறப்படுகிறது. அவர் டெலிவரி டிரைவராக நடித்துள்ளார். அவர் இரண்டு பெண்களை காதலிக்கிறார் மற்றும் நித்தியாமேனன் சிறந்த தொழியாகவும், அவருக்கு வாழ்க்கையை வழிநடத்தி செல்ல உதவுகிறார், இது துல்லியமாக படத்தின் முக்கிய அம்சமாக வெளிபடுத்தியுள்ளனர்.

Thiruchitrambalam: உலகளவில் திருச்சிற்றம்பலம் 2ஆம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

திருச்சிற்றம்பலத்தின் நாள் வாரியான பாக்ஸ் ஆபிஸ் வசூல்

  •  முதல் நாள்: ரூ. 11 கோடி
  •  இரண்டாவது நாள்: ரூ 10 கோடி
  •  மொத்த 2 நாள் வசூல்: ரூ 21 கோடி

திருச்சிற்றம்பலம் நடிகர்கள், அவர்களின் நடிப்பிற்காக நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றனர். அனிருத் இப்படத்திற்கு சில அழகான பாடல்கள் மற்றும் பின்னணி இசை வழங்கியுள்ளார். அதன் பின்னணி இசை படத்தின் காதல், நகைச்சுவை மாற்று காட்சிகள் உயர்த்த உதவியது.

Also Read: பா. ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் டிரைலரை சிம்பு வெளியிட்டார்

இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, முனிஷ்காந்த், ஸ்ரீரஞ்சனி, ஸ்டண்ட் சில்வா, அறந்தாங்கி, வி.ஜே.பப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யாரடி நீ மோகினிக்கு பிறகு தனுஷ் மற்றும் மித்ரன் ஆர் ஜவஹர் கூட்டணியில் உருவாகும் படம் இது. சன் பிக்சர்ஸ் பேனரில் கலாநிதி மாறன் இப்படத்தை தயாரித்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பு செய்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் படத்தை விநியோகம் செய்தது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version